வீடு / சமையல் குறிப்பு / க்ஹோயா மட்டர் பன்னீர்

Photo of Khoya Matar Paneer by Soniya Singh at BetterButter
684
58
4.5(0)
0

க்ஹோயா மட்டர் பன்னீர்

Jan-12-2016
Soniya Singh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • டின்னெர் பார்ட்டி
  • மற்றவர்கள்
  • தீபாவளி
  • நார்த் இந்தியன்
  • பஞ்சாபி
  • ஹிமாச்சல
  • ராஜஸ்தான்
  • ஸாட்டிங்
  • முட்டை இல்லாத
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 250 காட்டேஜ் சீஸ் (பன்னீர்)
  2. 1 கப் வெங்காய விழுது
  3. 1/2 கப் தண்ணீர் (கெட்டி தன்மைக்கேற்ப)
  4. 1/2 கப் மவா (க்ஹோயா, ஆவியாகிய திடமான பால்)
  5. 2 தேக்கரண்டி புதிய மலாய்/ க்ரீம்
  6. 1 டீக்கரண்டி கிச்சன் கிங் மசாலா
  7. 2 டீக்கரண்டி அரைத்த கொத்தமல்லி
  8. 1/2 டீக்கரண்டி மஞ்சள் தூள்
  9. 1/2 டீக்கரண்டி காஷ்மீர் சிகப்பு மிளகாய்
  10. 1/2 டீக்கரண்டி சிகப்பு மிளகாய்த் தூள்
  11. 1 டீக்கரண்டி உப்பு
  12. 1/2 கப் வேகவைத்த பட்டாணி
  13. 1 கப் தக்காளி விழுது
  14. 1 டீக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  15. 2 தேக்கரண்டி எண்ணெய்/ நெய்
  16. 2 துளி ஆரஞ்சு சிகப்பு கலர்

வழிமுறைகள்

  1. கனமான பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு செய்துக்கொண்டு வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.இது இளஞ்சிவப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்.
  2. இப்போது மவா சேர்த்துக் கொள்ளவும், அது பொன்னிறமாக மாறி எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கிக்கொள்ளவும்.
  3. இப்போது தக்காளி விழுது, காரங்கள் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கி கொள்ளவும். இது எண்ணெய் விட்டு தனியாக வரும் வரை வேகவிடவும். இப்போது புதிய க்ரீம், வேகவைத்த பட்டாணி அல்லது மலாய் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதை குறைந்த தீயில் 5-6 நிமிடம் வேகவிடவும்.
  4. பன்னீரை நட்சத்திர பிஸ்கட் அல்லது சதுர வடிவத்திலோ வெட்டிக்கொள்ளவும். மீதமுள்ள பன்னீரை துருவிக்கொள்ளவும்.
  5. இப்போது துருவிய பன்னீர் மற்றும் 1/2 கப் வெட்டிய பன்னீரையும் சேர்த்துக்கொள்ளவும். பின் ஆரஞ்சு கலர் சேர்க்கவும். இப்போது நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  6. இப்போது மாவா மட்டர் பன்னீரை பரிமாறும் கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள வெட்டிய பன்னீரையும் மற்றும் கொத்தமல்லியையும் அழகுக்காக தூவிக் கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்