வீடு / சமையல் குறிப்பு / தோசை பிட்சா

Photo of Dosa Pizza by App Play at BetterButter
165
3
0.0(0)
0

தோசை பிட்சா

Nov-09-2017
App Play
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தோசை பிட்சா செய்முறை பற்றி

Food for kids

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • ஃப்யூஷன்
 • பான் பிரை
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. 2 cups – தோசை மாவு
 2. 2 cups – காய்கறி நறுக்கியது
 3. 4 tbsp + 2 tbsp – தக்காளி சாஸ் + சில்லி சாஸ்
 4. வேண்டிய அளவு – பிட்சா சீஸ்
 5. சுவைக்கு வேண்டிய அளவு உப்பு
 6. காரத்துக்கு வேண்டிய அளவு சில்லி flakes / மிளகுத்தூள் / Cayenne Pepper
 7. நறுக்கிய Olives (விரும்பினால்)

வழிமுறைகள்

 1. காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
 2. இங்கே நான் சிவப்பு, மஞ்சள், பச்சை மூன்று நிற குடைமிளகாய் மற்றும் கோஸ் எடுத்து நறுக்கினேன்.
 3. தோசை என்பது மிக மெல்லிதாக இருக்கும் என்பதால் காய்கறிகளை பொடியாக நறுக்கினால் நல்லது. 
 4. Food Processor இருப்பவர்கள் அதில் chop பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
 5. அடுத்து தக்காளி மற்றும் சில்லி சாஸை கலந்து வைக்கவும்.
 6. குழந்தைகளுக்கு serve பண்ணனும் என்றால் தக்காளி சாஸ் அதிகமாகவும் சில்லி சாஸ் குறைவாகவும் எடுக்கலாம்.  நான் எடுத்தது 2 : 1 Ratio வில் தான்.
 7. பிட்சா சீஸை தயாராக வைக்கவும்.
 8. அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு சூடானதும் மிகவும் சிம்மில் வைக்கவும்.
 9. இங்கே தோசைதான் பிட்சாவுக்கு base என்பதால் நாம் toppingsஐ முடிப்பதற்குள் தோசை வெந்துவிடும். 
 10. அதனால் அடுப்பு மிகவும் குறைந்த தீயில் இருக்கணும்.
 11. தோசை வார்த்துவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு (எண்ணெய் விட்டால் தோசை கேரண்டியாக எடுக்க வரும்) மேலே சாஸை பரவலாக தடவவும்.
 12. சாஸ் தடவும்போது அழுத்தாமல் ஜெண்டிலா தடவலாம். 
 13. அதேபோல ஓரம் வரை தடவாமல் நடுவில் தடவினால் நல்லது, இல்லையென்றால் தோசை sog ஆக வாய்ப்பு உண்டு.
 14. சாஸை தடவினதும் நறுக்கிய காய்கறிகளை பரவலாகத் தூவி மேலே சிட்டிகை உப்பு, விருப்பத்துக்கு ஏற்ப மிளகுத்தூள் அல்லது Chilli Flakes அல்லது Cayenne Pepper தூவவேண்டும்.
 15. அடுத்து சீஸும் தூவி நறுக்கி வைத்த Olives ஐயும் அங்கங்கே வைத்து ஒரு மூடியால் மூடவும்.
 16. தோசையைத் திருப்ப முடியாது என்பதால் மூடி வைப்பது மேல் பக்கம் வேக உதவும்.
 17. தோசையும் வெந்து சீஸும் உருகும்வரை மூடி வைக்கலாம்.  இதற்கு சுமார் ரெண்டு முதல் மூன்று நிமிடங்கள்தான் ஆகும்.
 18. சீஸ் உருகினதும் திறந்து ஒரு துடுப்பால் நிதானமாக தோசையை lift பண்ணி ஒரு தட்டுக்கு transfer செய்து சுடச்சுட இருக்கும்போதே பிட்சா கட்டரால் வெட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்