Photo of Avasara rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
765
2
0.0(0)
0

அவசர ரசம்

Nov-10-2017
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவசர ரசம் செய்முறை பற்றி

என்னதான் நாம விதவிதமான குழம்பு வைத்தாலும் குழந்தைகளுக்கு பருப்பு சாதத்துடன் பிசைய ரசம் தேவைப்படும். அதுவும் மழைநேர இரவிலோ அல்லது இருமல் சளி காய்சல் நேரத்திலோ ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும். பருப்பு புளி சேர்க்காத ரசம் இது. செய்வது மிகமிக சுலபம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி - 4
  2. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  3. மிளகு சீரகம் பொடி - 1 தேக்கரண்டி
  4. உப்பு 3/4 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 1 சிட்டிகை
  6. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  7. தண்ணீர் - 2 cup
  8. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  9. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து மிளகு சீரக பொடி பெருங்காயம் மஞ்சள்பொடி தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. இரண்டு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  3. ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கவும்
  4. இரண்டு கப் தண்ணீர் ஒன்றரை கப் ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்
  5. கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பொரிச்ச ரசம் தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் அல்லது கப்பில் விட்டு அப்படியே சூப் போல் குடிக்கலாம். மழைநேரங்களில்/காய்சல் சளி உள்ளவர்களுங்கு வாய்க்கு ருசியாக இருக்கும் . நன்றாக பசியை தூண்டும். செய்வதும் சுலபம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்