BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பருப்பு போளி

Photo of Paruppu Poli by Jayasakthi Ekambaram at BetterButter
0
2
0(0)
0

பருப்பு போளி

Nov-10-2017
Jayasakthi Ekambaram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு போளி செய்முறை பற்றி

பருப்பை பூரணமாக வைத்து செய்யும் போளி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை பருப்பு 200கிராம்
  2. மைதா மாவு 250 கிராம்
  3. வெல்லம் 250 கிராம்
  4. ஏலக்காய் தூள் 1 ஸ்பூன்
  5. நெய் 100 கிராம்
  6. ரீபைண்டு சமையல் எண்ணெய் 100 கிராம்

வழிமுறைகள்

  1. மைதா மாவை அரை ஸ்பூன் உப்பு, ரீபைண்டு ஆயில் சேர்த்து தட்டும் பதத்திற்கு தளதளவென பிசைந்து வைக்க வேண்டும்.
  2. சப்பாத்தி மாவுக்கு சேர்ப்பதை விட சற்று அதிக நீர் விட்டு பிசையவும்.
  3. மாவை ஈரத் துணியில் சுற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  4. அது ஊறும் நேரத்தில் பூரணம் தயார் செய்யவும்
  5. பூரணத்திற்கு:
  6. கடலை பருப்பை 3 விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும்
  7. பருப்பை ஆற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
  8. வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
  9. கொதித்ததும் அடியிலிருக்கும் மண்ணை வடிகட்டி நீக்கவும்.
  10. மீண்டும் உருட்டு பதம் வரும் வரை வெல்லத்தை கொதிக்க வைக்கவும்.
  11. அரைத்த பருப்பில் வெல்லப் பாகை தேவையான அளவு ஊற்றி ஏலக்காய் தூள் கலந்து உருண்டைகள் பிடிக்கவும்.
  12. வாழை இலையில் எண்ணெய் தடவி மைதா மாவை வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
  13. அதன் நடுவில் பருப்பு உருண்டையை வைத்து மைதா மாவால் மூடவும்.
  14. மூடிய பின் மீண்டும் வட்டமாக தட்டவும்.
  15. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சுடானதும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி வாழை இலையில் உள்ள போளியை கல்லின் மேல் போட்டு வேக வைத்து வெந்ததும் தோசை கரண்டியால் திருப்பி போட்டு மறு பக்கம் வேக விடவும்.
  16. வெந்ததும் தட்டில் எடுத்து வைத்து மேலே 1 ஸ்பூன் நெய் தடவவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்