வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு மாவு உருண்டை

Photo of Moong dal flour ladoo by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
774
3
0.0(0)
0

பாசிப்பருப்பு மாவு உருண்டை

Nov-11-2017
Muthulakshmi Madhavakrishnan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு மாவு உருண்டை செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் சத்தான இனிப்பு வகை உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் பாசிப்பருப்பு
  2. 2 கப் சர்க்கரை
  3. 15 முந்திரி பருப்பு
  4. 4 ஏலக்காய்
  5. 3/4 கப் நெய்

வழிமுறைகள்

  1. வாணலியை சூடாக்கவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வாசம் வரும் வரை நன்கு வறுக்கவும். சிறிது நிறம் மாறும் போது அடுப்பை அணைத்து விடவும். பின் நன்கு ஆறவிடவும்.
  2. அவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின் சல்லடையில் சலித்து கொள்ளவும். குருணை அதிகமாக இருந்தால் மீண்டும் ஒரு முறை அரைத்து சலித்து கொள்ளவும்.
  3. பின் அதே ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  4. அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவு, பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. அடுப்பில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து கலந்த மாவில் சேர்க்கவும்.
  6. பின் நெய்யை இளம் சூட்டில் காயவைக்கவும்.
  7. நெய் நன்கு சூடானதும் கலந்த மாவில் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
  8. மாவில் சூடு இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  9. சுவையான எளிமையான பாசிப்பருப்பு மாவு லட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்