வீடு / சமையல் குறிப்பு / ஜீரா ரைஸ் ஆலுமசாலா

Photo of Jeera rice with Aloo Masala by Krishnasamy Vidya Valli at BetterButter
584
3
0.0(0)
0

ஜீரா ரைஸ் ஆலுமசாலா

Nov-11-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஜீரா ரைஸ் ஆலுமசாலா செய்முறை பற்றி

ஹோட்டல்களுக்கு செல்லும் போது குழந்தைகள் ஆர்டர் செய்யும் ஐட்டம் இது . எப்போதும் ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு பதில் வீட்டிலேயே தரமான முறையில் தயாரிக்கலாம். செலவும் குறைவுதான். ரொம்ப ஸ்பைசியாக இல்லாமல் மீடியமாக இருக்குமாதலால் அனைவரும் சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாஸ்மதி அரிசி - 2 1/2 cup
  2. முந்திரி பருப்பு - 10
  3. வெங்காயம் - 2
  4. பட்டை ஏலக்காய் கிராம்பு - தலா 3
  5. பச்ச மிளகாய் - 2
  6. சீரகம் - 4 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை - 3 ஆர்க்கு
  8. நெய் - 4 தேக்கரண்டி
  9. உப்பு - 1 தேக்கரண்டி
  10. ஆலுமசாலாக்கு தேவையானவை
  11. உருளைக்கிழங்கு - 5 பெரியது
  12. வெங்காயம் - 4 பெரியது
  13. பெங்களூர் தக்காளி - 4
  14. முந்திரி பருப்பு - 10 பாதாம் - 10 (வெந்நீர் விட்டு ஊற வைக்கவும்)
  15. ஏலக்காய் - 6
  16. கிராம்பு - 5
  17. பட்டை - 4 (பாதி விரல் அளவில் உள்ளது )
  18. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  19. கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி
  20. காஷ்மீர் சில்லி பவுடர் - 1 தேக்கரண்டி
  21. எண்ணெய் - 10 தேக்கரண்டி
  22. மஞ்சள்பொடி-1தேக்கரண்டி
  23. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  24. சீனி - 1 / 2 தேக்கரண்டி
  25. எலுமிச்சை சாறு - 1 / 2 தேக்கரண்டி
  26. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஜீராரைஸ் செய்முறை:
  2. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்
  3. கடாயில் நெய் விட்டு சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு(தட்டிப்போட்டு) வெங்காயம் பச்ச மிளகாய் கீறிபோட்டு வதக்கவும்
  4. வடிகட்டிய அரிசி சேர்த்து நன்றாக கிளறவும்
  5. வதக்கியதை 3 3/4 cup தண்ணீர் சேர்த்து ரைஸ் குக்கரில் குக்கிங் மோடில் வைக்கவும் . விருப்பப்பட்டால் தண்ணீர் அளவை கூட்டிக்கொள்ளலாம்
  6. முக்கால் பாகம் வெந்ததும் உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி மீண்டும் குக்கிங்கில் வைக்கவும்
  7. ரைஸ் குக்கர் இல்லாதவர்கள் குக்கரில் ஒரு விசில் வேக வைக்கவும். அல்லது கொதிக்கும் நீரில்(தண்ணீர் அளவாக வைத்து ) அரிசியை போட்டும் வேகவிடலாம்.
  8. கடாயில் நெய் விட்டு முந்திரி கருவேப்பிலை வறுத்து சேர்த்தால் ஜீராரைஸ் தயார்.
  9. உருளைக்கிழங்கை தோல் சீவி வேக வைக்கவும்
  10. வெங்காயம் தக்காளி யை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  11. நறுக்கியதில் பாதி எடுத்து தனி தனியாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  12. ஊறவைத்த முந்திரி மற்றும் பாதாம்(தோலுரித்து வி்ட்டு ) நைஸாக அரைத்துகொள்ளவும்
  13. கடாயில் எண்ணெய்விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் வறுத்து ஒண்ணு இரண்டாக பொடித்துக்கொள்ளவும்
  14. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .
  15. பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் அரைத்த வெங்காயம் மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  16. தக்காளி நறுக்கியது மற்றும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்
  17. தனியாக ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வேகவைத்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும் .
  18. முதலில் செய்ததுடன் வதக்கிய உருளைகிழங்கை சேர்க்கவும்
  19. அரைத்த முந்திரி பாதாம் பருப்பு சேர்க்கவும்
  20. கரம் மசாலா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  21. முதலில் பொடி செய்த ஏலக்காய் பட்டை கிராம்பு தூவவும்
  22. எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வேளையில் சர்க்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  23. எலுமிச்சை சாறு கொத்தமல்லி இலை பச்சை வெங்காயம் வட்டமாக நறுக்கியது சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்