வீடு / சமையல் குறிப்பு / ப்ரூட் மற்றும் நட்ஸ் பணியாரம்

Photo of Fruits and nuts paniyaram by Rajeswari Annamalai at BetterButter
671
2
0.0(0)
0

ப்ரூட் மற்றும் நட்ஸ் பணியாரம்

Nov-11-2017
Rajeswari Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரூட் மற்றும் நட்ஸ் பணியாரம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து கேழ்வரகு, சோளம், கம்பு போன்ற சத்து மாவு உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பணியாரத்தில் இந்த மூன்று மாவுடன் ஆப்பிள், வாழைப்பழம், தேன், பாதாம், முந்திரி மற்றும் வெல்லமும் உள்ளது. சத்து நிறைந்த ஒரு உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 3/4 கப் கோதுமை மாவு
  2. 1/8 கப் சோளம் மாவு
  3. 1/8 கப் கம்பு மாவு
  4. 1/8 கப் கேழ்வரகு மாவு
  5. 1 மேஜைக்கரண்டி அரிசி மாவு
  6. ஓரு சிட்டிகை உப்பு
  7. 1/4 கப் வெல்லம் பொடி
  8. 1/4 கப் தேன்
  9. 1 மீடியம் வாழைப்பழம்
  10. 1/4 கப் நறுக்கிய ஆப்பிள்
  11. 1/4 தேக்கரண்டியளவு ஏலத்தூள்
  12. 1/4 தேக்கரண்டியளவு சுக்கு தூள்
  13. 10 பாதாம்
  14. 10 முந்திரி
  15. 1/2 கப் + 1/2 கப் தண்ணீர்
  16. நல்லெண்ண தேவையான அளவு

வழிமுறைகள்

  1. எல்லா மாவு, உப்பு, ஏலத்தூள், சுக்கு தூள் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்
  2. வெல்லத்தை 1/2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்
  3. பின்னர் வாழைப்பழம், வெல்லத்தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. பின்னர் சலித்த மாவில் தேன் மற்றும் வெல்லம் வாழைப்பழம் கலந்த நீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. பிறகு 1/2 கப் தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் ஊற்றும் மாவு பதத்திற்கு கலக்கவும்
  6. தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்
  7. நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் ஆப்பிள் சேர்த்து கலக்கவும்
  8. பணியாரம் மாவு தயார்
  9. பணியாரம் கல்லை சூடாக்கி, எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் மாவை துளையில் ஊற்றி இரு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்