வீடு / சமையல் குறிப்பு / டிரை கலர் சப்பாத்தி

Photo of Tri colour chapathi by Sheik Mohamed at BetterButter
836
3
0.0(0)
0

டிரை கலர் சப்பாத்தி

Nov-11-2017
Sheik Mohamed
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டிரை கலர் சப்பாத்தி செய்முறை பற்றி

Main dish healthy too குழந.தைகளுக்கான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு -1/2 கிலோ
  2. பாலக் கீரை -1 கட்டு
  3. பீட்ரூட் -சின்னது 1
  4. உப்பு -தேவைக்கேட்ப
  5. எண்ணெய் ,நெய் -சிறிதளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை துண்டுகளாக்கி வேக விடவும்
  2. பாலக்கை காம்பை ஆய்ந்து வேக விடவும்
  3. ஆறிய பின் இரண்டையும் தனி தனியாக அரைத்துக் கொள்ளவும்
  4. மாவை மூன்றாக பிரித்து முதல் ஒரு பகுதியை நீர் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  5. இரண்டாம்பகுதியில் அரைத்த கீரையை சேர்த்து பிசையவும் .தண்ணீர் தேவை படாது.
  6. மூன்றாம் பகுதியில் அரைத்த பீட்ரூட்டை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்
  7. மூன்று பகுதியிலிருந்தும் மூன்று சிறு உருண்டைகளை எடுத்து தனித்தனியாக மூன்று சப்பாத்திகளாக தேய்க்கவும்.
  8. ஒன்றன் மீது ஒன்றாக மூன்றையும் வைத்து ரோல் செய்யவும்
  9. ரோலை மீடியம் சைஸ் துண்டுகளாக கட் பண்ணவும்
  10. கட் பண்ண துண்டுகளை சப்பாத்திகளாக நிதானமாக விரிக்கவும் .
  11. சூடான சப்பாத்தி கல்லில் போட்டு நெய் விட்டு எடுத்தால் சுவையும் சத்தும் நிறைந்த டிரை கலர் சப்பாத்தி தயார் .
  12. கீரை காய்கறி விரும்பாத குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்