வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாக்லேட் மூஸ்

Photo of SweetPotato Chocolate Mousse by Ayesha Ziana at BetterButter
343
2
0.0(0)
0

சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாக்லேட் மூஸ்

Nov-11-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாக்லேட் மூஸ் செய்முறை பற்றி

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் செய்த சாக்லேட் மூஸ் டெசர்ட்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ப்லெண்டிங்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு 2 சிறியது அல்லது 1 பெரிது
  2. கோகோ பவுடர் 1 1/2 டேபிள் ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
  3. பேரீட்சைபழம் 8 முதல் 12 வரை
  4. தேங்காய்ப்பால் 1/4 கப்
  5. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. சர்க்கரைவள்ளிகிழங்கை தோலுடன் இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும்(அல்லது தோலை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்). பின்னர், தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கவும்.
  2. பேரீட்சை பழங்களை குறைவான அளவு சூடான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. மிக்ஸியில் வேக வைத்த கிழங்கு, ஊறிய பேரீட்சை பழங்கள், கோகோ பவுடர், உப்பு, மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக அரைக்கவும். (தேங்காய்ப்பால் கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கு சேர்க்கவும். மூஸ் பதம் கிடைத்ததும் நிறுத்தி விடவும்.)
  4. கலவை நன்றாக அரைந்து கெட்டியான மூஸ் பதம் வந்ததும், பரிமாறும் பவுலில் கொட்டி மேலே கலர் மிட்டாய்/ஸ்பிரிங்கில்ஸ்/நறுக்கிய பழங்கள் வைத்து டாப்பிங் செய்யவும்.
  5. சுவையான, ஆரோக்கியமான, குழந்தைகளைக் கவரும் வகையில் கிழங்கு மூஸ் தயார். இது farmonplate ப்ளாக்கைப் பின்பற்றி செய்யப்பட்டது. மூஸ் பிரான்ஸ் நாட்டு டெசர்ட் ஆகும். இதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து, சீனி சேர்க்காமல் செய்திருப்பதால் கூடுதல் ஆரோக்கியம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்