வீடு / சமையல் குறிப்பு / பொரி உருண்டை

Photo of Puffed Rice Balls by Asiya Omar at BetterButter
1402
3
0.0(0)
0

பொரி உருண்டை

Nov-12-2017
Asiya Omar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொரி உருண்டை செய்முறை பற்றி

வெல்லமும் பொரியும் சேர்த்து செய்யும் சத்தான குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பும் நொறுக்கு தீனி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசிப்பொரி - 100 கிராம்
  2. (பொரயில் சும்மா சாப்பிடுகிற மாதிரி உப்பு சுவை இருக்க வேண்டும்)
  3. பொடித்த வெல்லம் -200 கிராம்
  4. ஏலக்காய் -3(விரும்பினால்)

வழிமுறைகள்

  1. வெல்லத்துடன் 3 ஏலக்காய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.பொரியை அளந்து தயாராய் எடுத்து வைக்கவும்.
  2. பொடித்த வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  3. நன்கு கொதித்து பாகு கெட்டியாக வேண்டும்.
  4. பாகு பதம் கெட்டியாக இருக்க வேண்டும்.தண்ணீரில் போட்ட பாகை கையால் எடுத்து உருட்டும் அளவு இருக்க வேண்டும்.
  5. பொரியை தட்டி பிரட்டவும்.
  6. நன்கு ஒரு சேர மேலிருந்து கீழாக வெல்லம் பொரி முழுவதும் ஒட்டும் அளவு பிரட்டவும்.
  7. சூடாக இருக்கும் பொழுதே கையில் தண்ணீர் தொட்டு இரண்டு கையாலோ அல்லது ஒரு கையிலோ உருண்டையாக அமுக்கி பிடிக்கவும்.பெரிய உருண்டை என்றால் இரண்டு கையால் பிடிக்கலாம்.
  8. சிறிய உருண்டை என்றால் குழந்தைகள் எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும்.
  9. சத்தான சுவையான பொரி உருண்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்