Photo of Instant vegetable rice by Krishnasamy Vidya Valli at BetterButter
855
4
0.0(1)
0

Instant vegetable rice

Nov-12-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி - 2 cup
  2. வெங்காயம் - 2
  3. உருளைகிழங்கு - 1 பெரியது
  4. கேரட் - 1 பெரியது
  5. குடைமிளகாய் - 1
  6. பச்ச பட்டாணி - ஒரு கைப்பிடி
  7. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  8. கரம் மசாலா /பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி
  9. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
  11. தயிர் - 1௦௦ மிலி
  12. உப்பு - 1 - 1 / 4 தேக்கரண்டி
  13. தாளிக்க - பட்டை கிராம்பு ஏலக்காய் - தலா இரண்டு முதல் நான்கு
  14. நெய் - 3தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசி களைந்து 3 cup தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  2. ரைஸ் குக்கரில் வைக்கலாம் அல்லது அளவாக தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வைக்கலாம் அல்லது தனி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வேக விடலாம்
  3. சாதம் வெந்ததும் ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்
  4. வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  5. மற்ற காய்களை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  6. கடாயில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்கவும்
  7. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. வெங்காயம் பச்ச வாசனை போனவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  9. பச்ச வாசனை போனவுடன் எல்லா காய்களையும் போட்டு வதக்கவும்
  10. காய்கள் நன்றாக வதங்க்கியபின் தயிர் சேர்த்து கிளறவும்
  11. கரம் மசாலா பொடி காஷ்மீர் சில்லிபவுடர் உப்புசேர்த்து கிளறவும்
  12. ஆறவைத்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும்
  13. கொத்தமல்லி இலை தூவினால் அருமையான இன்ஸ்டன்ட் வெஜிடபிள் ரைஸ் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Suberiya Rahmath
Feb-09-2019
Suberiya Rahmath   Feb-09-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்