ஆலு பூரி | Aloo Poori in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  12th Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Aloo Poori recipe in Tamil,ஆலு பூரி, Krishnasamy Vidya Valli
ஆலு பூரிKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    40

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

2

0

ஆலு பூரி recipe

ஆலு பூரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Aloo Poori in Tamil )

  • கோதுமை மாவு - 2 cup
  • உருளைக்கிழங்கு - 4 (மீடியம் ஸைஸ் )
  • உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  • காஷ்மீர் சில்லிபவுடர் - 1 தேக்கரண்டி
  • ஆம்சூர் பவுடர் -3/4 தேக்கரண்டி
  • ரவை - 2 தேக்கரண்டி
  • நெய் /எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி

ஆலு பூரி செய்வது எப்படி | How to make Aloo Poori in Tamil

  1. குக்கரில் உருளைகிழங்கை தோல் சீவி வேகவைக்கவும்
  2. பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு சில்லிபவுடர் ஆம்சூர் பவுடர் கரம் மசாலா ரவை கொத்தமல்லி இலை சேர்க்கவும்
  3. வேகவைத்த உருளைக்கிழங்கை துருவிக்கொள்ளவும்
  4. இரண்டையும் சேர்த்து நெய் அல்லது எண்ணெய் விட்டு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  5. உருண்டைகளை பூரி போல் இட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும் .மாவு பிசைந்தவுடன் இட்டு பொரித்து விடவும். நேரம் ஆகும்போது இடுவதற்கு சரியாக வராமல் ஒட்டிக்கொள்ளும். அப்போழுது dryமாவு கொஞ்சம் தொட்டுக்கொள்ளலாம். சுவையான ஆலு பூரி தயார்

எனது டிப்:

டாலுடன்/டொமட்டோ/சில்லி சாஸுடன் /ஆனியன் ரைத்தாவுடன் சாப்பிடலாம். ஆலுவிற்கு பதில் கேரட்/முள்ளங்கி/பீட்ரூட் சேர்க்கலாம்

Reviews for Aloo Poori in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.