வீடு / சமையல் குறிப்பு / பெசரட்டு தோசை வித் டாப்பிங்

Photo of Pesarattu Dosa with Topping by Ayesha Ziana at BetterButter
353
4
0.0(0)
0

பெசரட்டு தோசை வித் டாப்பிங்

Nov-12-2017
Ayesha Ziana
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பெசரட்டு தோசை வித் டாப்பிங் செய்முறை பற்றி

ஆந்திராவின் பிரபலமான பெசரட்டு தோசையில் குழந்தைகளுக்கு விருப்பமான கலர்புல் மாறுதல்களுடன்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆந்திரப்ரதேஷ்
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவுக்கு: சிறுபயறு 3/4 கப்
  2. இஞ்சி 1 மீடியம் சைஸ் துண்டு
  3. பச்சை மிளகாய் 4
  4. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கு
  6. எண்ணெய் தேவைக்கு
  7. முதல் டாப்பிங்: முட்டை 2(ஒவ்வொரு தோசைக்கும்)
  8. மிளகு தூள் தேவைக்கு
  9. 2ஆவது டாப்பிங்: வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  10. கேரட் 1 துருவியது
  11. இஞ்சி சிறு துண்டு துருவியது
  12. மல்லித்தழை சிறிது
  13. சீரகம் 1 ஸ்பூன்
  14. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. தோசை மாவுக்கு: சிறுபயறை இரவில் ஊற வைக்கவும். காலையில் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  2. ஒரு பவுலில், 2ஆவது டாப்பிங் கு தேவையான வெங்காயம், கேரட், இஞ்சி, மல்லித்தழை, சீரகம் சேர்த்து கலந்து வைக்கவும். உப்பை இப்பொழுது சேர்க்க கூடாது. தோசையில் தூவுவதற்கு சற்று முன் தான் சேர்க்க வேண்டும், இல்லையெனில் உப்பு தண்ணீர் விட்டு விடும்.
  3. ஒரு நான்ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி, ஒரு கரண்டி தோசை மாவு ஊற்றி நன்றாக பரத்தவும். அடுப்பை சிம்மில் வைத்து, தோசை பாதி வெந்ததும் 2 முட்டைகளை தோசையின் மேல் உடைத்து ஊற்றி, தோசையில் எல்லா பாகமும் படும்படி முட்டையைப் பரத்தவும். பின் மிளகு தூளையும் முட்டையின் மேல் தூவவும்.
  4. அடுத்து, 2ஆவது டாப்பிங்கையும் சமமாக முட்டை டாப்பிங் மேல் தூவவும். மூடி வைத்து சில நிமிடங்கள் வேக விடவும்.
  5. பின்னர், கவனமாக தோசையைத் திருப்பி போட்டு மேலும் சில நிமிடங்கள் வேக விடவும். வெந்ததும், தட்டில் எடுத்து வைத்து தேவைப்பட்டால் துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்குப் பரிமாறவும்.
  6. ருசியான சுவையுடன் கலர்புல் பெசரட் தோசை தயார். இது செஃப் சஞ்சய் தும்மா அவர்களின் ரெசிபி. பல வகை சத்துக்களும் நிறைந்திருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்