வீடு / சமையல் குறிப்பு / வெண்ணிலா டோனட்ஸ்

Photo of Vanilla donuts with chocolate glaze by Rajeswari Annamalai at BetterButter
546
3
0.0(0)
0

வெண்ணிலா டோனட்ஸ்

Nov-12-2017
Rajeswari Annamalai
150 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

வெண்ணிலா டோனட்ஸ் செய்முறை பற்றி

வீட்டிலேயே சுலபமாக செய்து கொள்ளவும் இந்த கோதுமை மாவு டோனட்ஸுகள் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஸ்னாக்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. 1/2 கப் - 1/2 மேஜைக்கரண்டி மைதா மாவு
  2. 1/2 மேஜைக்கரண்டி கார்ன் ப்லோர்
  3. 1 1/4 கப் கோதுமை மாவு
  4. 1/2 மேஜைக்கரண்டி இன்ஸ்டன்ட் ஈஸ்ட்
  5. 1/4 தேக்கரண்டியளவு உப்பு
  6. 1/8 கப் கேஸ்டர் சர்க்கரை
  7. 1/2 கப் மிதமான சூடு பால்
  8. 50 கிராம் சில்லென்ற வெண்ணெய் துண்டுகள்
  9. 1 தேக்கரண்டியளவு வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்
  10. உருக்கிய வெண்ணெய் ப்ரஷ் செய்வதற்கு
  11. சாக்லேட் கிலேஸ்:
  12. 1 கப் மில்க் அல்லது டார்க் சாக்லேட் சிப்ஸ்
  13. 1 மேஜைக்கரண்டி உருக்கிய வெண்ணெய்
  14. 2 மேஜைக்கரண்டி பால்

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் சர்க்கரை, மிதமான சூட்டு பால் சேர்த்து கலக்கவும்
  2. பின்னர் மைதா மாவு, கார்ன் மாவு சேர்த்து ஓரு கரண்டி வைத்து கலக்கவும்.
  3. பின்னர் 3/4 கப் கோதுமை மாவு மற்றும் வெண்ணெய் துண்டுகளை கலக்கவும் ( ஒவ்வொரு முறையும் 2 மேஜைக்கரண்டி + 1 வெண்ணெய் துண்டு என்று சேர்த்து கலக்கவும்)
  4. 3/4 கப் கோதுமை மாவு மற்றும் எல்லா வெண்ணெய் துண்டு கலக்கியவுடன், மீதமுள்ள 1/2 கப் கோதுமை மாவை கலந்து விட்டு கரண்டியை எடுத்து விடவும்
  5. இப்போது மாவு மிகவும் ஒட்டும் தன்மையாக இருக்கும். இதை 10 நிமிடங்களுக்கு பிசைந்து கொள்ளவும்
  6. பின்னர் மாவை பெரிய உருண்டை வடிவில் செய்து சிறிது எண்ணெய் தடவிய பவுலில் வைத்து ஒரு டவலை சுற்றி மூடவும்
  7. இதனை 1 1/2 - 2 மணி நேரம் வைத்து இரு மடங்காக உயர விடுங்கள்.
  8. மாவு இரண்டு மடங்காக ஆன பிறகு, அதை லேசாக பன்ச் செய்து, 1/2 இன்ச் மோட்டா சைஸில் திரட்டி கொள்ளவும்
  9. ஒரு டோநட் கட்டர் அல்லது சிறிய தட்டு வைத்து வட்டங்களாக கட் செய்து, பார்ச்மென்ட் ஷூட் பொருத்திய ஒரு பேக்கிங் ட்ரேயில் வைக்கவும்
  10. மறுபடியும் ஒரு 40 நிமிடங்களுக்கு இந்த டோனட்ஸ் வட்டங்களை மூடி வைத்து இரு மடங்காக உயர விடுங்கள்
  11. ஓவனை 200 டிகிரி ப்ரீஹீட் செய்து 15 - 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
  12. பின்னர் உருக்கிய வெண்ணெய் வைத்து பேக் செய்யப்பட்ட டோனட்ஸ் மேல் பிரஷ் செய்யவும்.
  13. சாக்லேட் க்லேஸ்:
  14. சாக்லேட் சிப்ஸ், உருக்கிய வெண்ணெய், பால் சேர்த்து கலக்கவும். இதை டபுள் பாய்லிங் முறையில் சூடு செய்து கிளறி இறக்கவும்
  15. கொஞ்சம் சூடு தணிந்த பிறகு, டோனட்ஸ் ஒவ்வொன்றையும் சாக்லேட் கிலேஸில் முக்கி எடுத்து கலர் ஸ்பிரங்கல்ஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்