வீடு / சமையல் குறிப்பு / கார்லிக் சீஸ் ப்ரெட்

Photo of Garlic cheese bread by Asiya Omar at BetterButter
441
6
0.0(0)
0

கார்லிக் சீஸ் ப்ரெட்

Nov-13-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கார்லிக் சீஸ் ப்ரெட் செய்முறை பற்றி

பிரசித்தமான ரெஸ்டாரண்ட் ரெசிப்பி.வீட்டில் ஈசியாக செய்து விடலாம்.ப்ரெட்,பட்டர்,கார்லிக் இருந்தால் போதும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • இத்தாலிய
  • பேக்கிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நீளவாக்கில் உள்ள ப்ரெட் அல்லது பன் -2
  2. வெண்ணெய் - 50 கிராம் துண்டு
  3. பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் -1-2 டேபிள்ஸ்பூன்
  4. பொடியாக நறுக்கிய மல்லி அல்லது பார்ஸ்லி இலைகள்- 1-2 டேபிள்ஸ்பூன்
  5. மொசரல்லா சீஸ் - அரை கப்
  6. உப்பு,வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள்,பார்ஸ்லி எடுக்கவும்.
  2. உப்பு,மிளகு சிறிது சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  3. நீள பன்னை மீடியம் சைஸ் துண்டாக கட் செய்யவும்.அதனில் வெண்ணெய் மிக்ஸ் ஸ்பூனால் எடுத்து வைக்கவும்.
  4. அதன் மேல் சீஸ் தூவவும்.பேக்கிங் ட்ரேயில கிரீஸ் செய்து அடுக்கவும்.
  5. எலெக்ட்ரிக் ஓவனை முற்சூடு செய்யவும். தயார் செய்த ப்ரெட்டை மீடியம் வெப்பநிலையில் 5-7 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  6. சுவையான சத்தான கார்லிக் சீஸ் ப்ரெட் தயார்.பிட்ஸா ஹட் போய் தான் வாங்கிக் கொடுக்கனும் இல்லை.வீட்டிலே செய்து கொடுத்து அசத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்