Photo of Dates Cashew Kuzhippaniyaram by Ayesha Ziana at BetterButter
68
7
0.0(1)
0

Dates Cashew Kuzhippaniyaram

Nov-13-2017
Ayesha Ziana
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Dates Cashew Kuzhippaniyaram செய்முறை பற்றி

சீனியோ வெல்லமோ சேர்க்காமல் பேரீட்சைகளின் இனிப்பை வைத்து செய்த குழிப்பணியாரம். குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பேரீட்சை பழங்கள் 15
  2. முந்திரி 15
  3. கோதுமை மாவு 1/2 கப் அல்லது தேவைக்கு ஏற்ப
  4. துருவிய தேங்காய் 3 ஸ்பூன்
  5. தட்டிய ஏலக்காய் 1
  6. எண்ணெய்/நெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. பேரீட்சை, முந்திரியை மூழ்கும் அளவு தண்ணீரில் இரவில் ஊற வைக்கவும்.(உடனே வேண்டுமென்றால் நன்றாக கொதித்த தண்ணீரில் போட்டு 20-30 நிமிடங்கள் மூடி வைக்கவும்).
  2. காலையில் தண்ணீரை வடித்து பேரீட்சை, முந்திரியை மிக்ஸியில் லேசாக அரைக்கவும்.
  3. பின்னர் அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  4. ஒரு பவுலில் அரைத்த கலவை ஊற்றி, சிறிது சிறிதாக கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். 1/2 கப் அல்லது சற்று கூடுதலாக தேவைப்படும். மாவு சற்று கெட்டியாக இருக்க வேண்டும். அதிக கெட்டியாகி விட்டால், பேரீட்சை முந்திரி ஊற வைத்த தண்ணீரை தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.
  5. பின்னர் தட்டிய ஏலக்காயும் சேர்த்து கலந்து வைக்கவும்.
  6. குழிப்பணியாரக் கல் சூடானதும் எண்ணெய்/நெய் ஊற்றி, மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி, இரு பக்கமும் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
  7. மிகவும் சுவையான சத்தான குழிப்பணியாரம் தயார். பேரீட்சை பழம் 6 மாதக் குழந்தை முதல் வளர்ந்த குழந்தைகளுக்கும் இரும்புச்சத்துகாக கட்டாயம் தினமும் கொடுக்க வேண்டிய ஒரு பழம். 1 வயது குழந்தை முதல் தாராளமாக காலை/மாலை நேரப் பண்டமாக கொடுத்து வரலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Jasira Banu
Nov-14-2017
Jasira Banu   Nov-14-2017

Healthy and tasty recipe definitely going to try

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்