வீடு / சமையல் குறிப்பு / தினை மாவு பேரீட்சை பர்பி

Photo of Dates and foxtail millet Burfi by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
575
3
0.0(0)
0

தினை மாவு பேரீட்சை பர்பி

Nov-13-2017
Muthulakshmi Madhavakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தினை மாவு பேரீட்சை பர்பி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்கள் வைத்து செய்யும் இந்த பர்பியை நீங்களும் செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் தினை மாவு
  2. 1/2 கப் நாட்டுச் சர்க்கரை
  3. 7 பேரீச்சம் பழம் (கொட்டை நீக்கியது)
  4. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  5. 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. சிறிது துருவிய பாதாம் பருப்பு

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் பேரீச்சம் பழத்தை போட்டு லேசாக அரைக்கவும். ( நைசாக அரைக்க வேண்டாம்).
  2. கனமான நான் ஸ்டிக் கடாயில் 1/2 கப் நாட்டு சர்க்கரை சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
  3. மிதமான தீயில் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த பேரீச்சம் பழத்தை சேர்க்கவும்.
  4. அவை வெந்ததும் நெய், ஏலக்காய் பொடி மற்றும் தினை மாவு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  5. அவை ஒட்டாமல் வரும் வரை கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டவும். பின் துருவிய பாதாம் பருப்பை மேலே தூவி சிறு சிறு சதுரங்களாக வெட்டவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்