வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி மிட்டாய்/ முரப்பா

Photo of Inji murrappa by Rabia Hamnah at BetterButter
815
3
0.0(0)
0

இஞ்சி மிட்டாய்/ முரப்பா

Nov-13-2017
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி மிட்டாய்/ முரப்பா செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான ஆரோக்கிய மிட்டாய். குழந்தைகளுக்கு இஞ்சி என்றால் அலர்ஜி. இஞ்சி கசாயம் குடிப்பது கடினம். ஆனால் இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். குழந்தைகளுக்காக என்பதால் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்ப்பது நலம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இஞ்சி -4 துண்டு(சிறியதாக வெட்டி Rice cooker கப்பிற்கு ஒன்று வரும் அளவு நறுக்கி வைக்கவும்)
  2. பால்-2 டேபிள் ஸ்பூன்
  3. சீனி- 4 கப்( Rice cooker cup)
  4. பனங்கற்கண்டு -1/2 கப்
  5. மிளகுத் தூள்-1/2 ஸ்பூன்
  6. நெய்-2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இஞ்சி துண்டுகளுடன் பால் சேர்த்து மிக்ஸியில் பட்டு போன்று அரைத்து கொள்ளவும்.
  2. பின்பு அடி கனமான பாத்திரத்தில் இஞ்சி விழுதை சேர்த்து சீனி, பனங்கற்கண்டு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, கொதி வந்ததும் குறைந்த தணலில் வைத்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
  3. கொஞ்சம் கெட்டி பதம் வந்ததும் ஒரு தட்டில் நெய்யை தடவி பின் கலவையை ஊற்றி பரப்ப வேண்டும்.
  4. ஊற்றி உடனேசூடாக இருக்கும் பொழுதே கீறி துண்டுகள் போட்டு ஆறியவுடன் டப்பாவில் போட்டு வைத்து பயன் படுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்