வீடு / சமையல் குறிப்பு / அடுக்கு ஸ்மூத்தி

Photo of Layered Smoothie by Hameed Nooh at BetterButter
898
5
0.0(0)
0

அடுக்கு ஸ்மூத்தி

Nov-13-2017
Hameed Nooh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அடுக்கு ஸ்மூத்தி செய்முறை பற்றி

பழங்களை ஆசையுடன் சாப்பிட தூண்ட சற்று வித்தியாசமாக கண்கவரும் செய்துக் கொடுத்தால் வேண்டாம் என்ற பேச்சுக்கே இடமில்லை... இதில் குழந்தைகள் விருப்பப்படி எவ்வகை பழங்களிலும் தயாரித்து அசத்தலாம்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அமெரிக்கன்
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கிவி  லேயர் செய்ய:
  2. கிவி பழம் - 2
  3. தேன்  - 2 தேக்கரண்டி
  4. வாழைப்பழம் - 1/2
  5. புதினா இலை - கொஞ்சம்
  6. கெட்டித்தயிர் - 2 தேக்கரண்டி
  7. ஸ்ட்ராபெர்ரி  லேயர் செய்ய:
  8. ஸ்ட்ராபெர்ரி - 8
  9. வாழைப்பழம் - 1/2
  10. தேன் - 2 மேஜைக்கரண்டி
  11. மாதுளைப்பழம் - 1/4 கப்
  12. பால் - 1/2 கப்
  13. கோக்கோ லேயர் செய்ய :
  14. வாழைப்பழம் - 1
  15. கோக்கோ தூள் - 2 தேக்கரண்டி
  16. பேரிச்சம்பழம் - 5
  17. பால் - 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் கிவி லேயர் செய்ய   தேவையான பொருட்கள் அனைத்தையும்  blender ல் அரைத்து கண்ணாடி க்ளாஸில் ஊற்றி  ப்ரிட்ஜில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
  2. அடுத்து அதே போன்று ஸ்ட்ராபெர்ரி லேயர் தயாரித்து மெதுவாக க்ளாஸில் ஊற்றி  ப்ரிட்ஜில் 5 நிமிடங்கள் வைக்கவும்
  3. கொக்கோ லேயர் அதே போன்று தயாரித்து ஊற்றி சில நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைத்து பருக கொடுக்கவும். மிகவும் இலகுவான அடுக்கு ஸ்மூத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்