பன் ரோசஸ் | Bun Roses in Tamil

எழுதியவர் Hameed Nooh  |  14th Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Bun Roses by Hameed Nooh at BetterButter
பன் ரோசஸ்Hameed Nooh
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

4

0

பன் ரோசஸ் recipe

பன் ரோசஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Bun Roses in Tamil )

 • மைதா - 2 கப்
 • ஈஸ்ட் - 3/4 டேபிள் ஸ்பூன்
 • பால் - 1/2 கப்
 • சீனி - 2 டேபிள் ஸ்பூன்
 • வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
 • வெள்ளை எள் - 2 மேஜைக்கரண்டி
 • உருளை கிழங்கு - 1
 • கேரட் - 2
 • வெங்காயம் - 1
 • பட்டாணி - 1/2 கப்
 • உப்பு - தேவைக்கு
 • கரம் மசாலா - 1/2  தேக்கரண்டி
 • மஞ்சள் தூள்- 1/4  தேக்கரண்டி
 • மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
 • எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

பன் ரோசஸ் செய்வது எப்படி | How to make Bun Roses in Tamil

 1. முதலில் stuffing செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு மிருதுவானதும் வேக வைத்த காய்கறிகளை போட்டு மசாலாக்கள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி அடுப்பலிருந்து கீழே இறக்கி வைக்கவும்.
 2. ஒரு பாத்திரத்தில் சீனியை வெது வெதுப்பான பாலில் நன்கு கரைத்து அதோடு ஈஸ்டை போட்டு கரைத்து ஏதும் செய்யாமல் 30 நிமிடங்கள் வைக்கவும்.
 3. மைதா , எண்ணெய் , 2 டேபிள் ஸ்பூன்  வெண்ணெய், பால் , உப்புடன் ஈஸ்ட் கலவையை ஊற்றி மிருதுவாக பிசையவும்.
 4. இதனை காற்று போகாதபடி மேலே சுத்தமான துணியைக் கொண்டு மூடி ஒரு பாத்திரத்தில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
 5. பின்னர் மாவை விரலைக் கொண்டு அழுத்தி உள்ளே உள்ள காற்றை வெளியேற்றி ஒரே அளவில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
 6. சப்பாத்தி பலகையில் மாவு உருண்டைகளை வட்டமாக பரப்பி நடுவில் stuffing ஐ வைத்து நான்கு பக்கமும் கத்தியால் வெட்டி stuffing ஐ சுற்றி இதழ் போல் மடிக்கவும்.
 7. Bun ன் மேல் எள் தூவி 150 டிகிரியில் preheat செய்யப்பட்ட அவனில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்து வெண்ணெயால் brush செய்து சூடாக சாஸுடன் சாப்பிடவும்.

எனது டிப்:

இதில் துறுவிய தேங்காய், சர்க்கரை , ஏலக்காய் தூள் சேர்த்து நடுவில் ஸ்டப் செய்தும் கொடுக்கலாம்.

Reviews for Bun Roses in tamil (0)