Photo of Masala Peanuts by Banupriya Jawahar at BetterButter
672
3
0.0(0)
0

மசால் கடலை

Nov-14-2017
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மசால் கடலை செய்முறை பற்றி

மழைகாலத்திற்கு ஏற்ற மாலை நேர ஸ்நாக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நிலக்கடலை 2கப்
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  5. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  6. பூண்டு 5 பல்
  7. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  8. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, நசுக்கிய பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, கையால் கிளறவும்.
  2. கலவையில் நிலக்கடலையை சேர்த்து பிசிறவும்.
  3. கடலை முழுவதும் மசாலா நன்கு ஒட்டும் படி நேர்த்தியாக பிசிறவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் கடலையை உதிரி உதிரியாய் போட்டு பொரித்து எடுக்கவும்.
  5. கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்து சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்