வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பயறு கபாப்

Photo of Moong sprouts kebab by Asiya Omar at BetterButter
330
3
0.0(0)
0

முளைகட்டிய பயறு கபாப்

Nov-14-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பயறு கபாப் செய்முறை பற்றி

முளைகட்டிய பயறை குழந்தைகளை இப்படி செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.சத்தும் சுவையுமிக்கது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஷாலோ ஃபிரை
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முளைகட்டிய பயறு - 1 கோப்பை
  2. இஞ்சி பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  3. பூண்டு பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் -2
  5. வெங்காயம் -1
  6. கொத்தமல்லி இலை -2 மேஜைக்கரண்டி
  7. பொட்டுக்கடலை -2 மேஜைக்கரண்டி
  8. மிளகு,சீரகம்,- தலா 1/4 தேக்கரண்டி
  9. சோம்பு -1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள்,கரம் மசாலா - தலா 1/4 தேக்கரண்டி
  11. ரொட்டித்தூள் - ஒரு கோப்பை
  12. மைதா மாவு -2+3 மேஜைக்கரண்டி
  13. எண்ணெய் பொரிக்க தேவைக்கு
  14. உப்பு - சுவைக்கு.

வழிமுறைகள்

  1. முளைகட்டிய பயறு முக்கியம்.பச்சைப் பயறை நன்கு ஊறிய பின்பு தண்ணீர் வடிகட்டி ஒரு பனியன் துண்டில் வைத்து பொதிந்து ஹாட் பாக்ஸில் வைக்கவும்.24 -36 மணி நேரம் கழித்து முளை வந்துவிடும்.
  2. ஒரு மிக்ஸி ஜாரில் முளைகட்டிய பயறு ,இஞ்சி,பூண்டு,மிளகாய், வெங்காயம்,மல்லி இலை சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
  3. மிக்ஸி சிறிய ஜாரில் பொட்டுக்கடலை,மிளகு,சீரகம் சோம்பு பொடிக்கவும்.
  4. ஒரு பவுலில் அரைத்த விழுது,பொடி சேர்க்கவும். 2 மேஜைக்கரண்டி மைதா,( கலவை இளக்கமாக இருந்தால்)மஞ்சள் தூள்,கரம் மசாலா சிறிது ,உப்பு சேர்க்கவும்.
  5. கலந்து கொள்ளவும்.
  6. கலவையை ஒரு போல் உருண்டையாக்கி கபாப் வடிவில் பிடிக்கவும்.மைதாவை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.ரொட்டி த்தூள் தயாராக வைக்கவும்.
  7. கபாபை மைதா கரைசலில் முக்கி ரொட்டி த்தூளில் பிரட்டி வைக்கவும்.
  8. ஒரு கடாயில் அளவாக எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
  9. எண்ணெய் சுத்தமாக வடியவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸ் அல்லது மிண்ட் ரைத்தாவுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்