வீடு / சமையல் குறிப்பு / காளான் மசாலா ரோஸ்ட்(ரெஸ்டாரென்ட் ஸ்டைல்)

Photo of Restaurant style mushroom masala roast by Subashini Krish at BetterButter
717
2
0.0(0)
0

காளான் மசாலா ரோஸ்ட்(ரெஸ்டாரென்ட் ஸ்டைல்)

Nov-15-2017
Subashini Krish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காளான் மசாலா ரோஸ்ட்(ரெஸ்டாரென்ட் ஸ்டைல்) செய்முறை பற்றி

ஹோட்டல்களுக்கு சென்றால் என் மகள் காளான் மசாலா தோசை மிகவும் விரும்பி உண்பாள்.அதை எளிமையாக வீட்டிலேயே செய்ய முடியும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பட்டன் காளான் 200 கிராம்
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. பச்சை மிளகாய் 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. சிக்கன் மசாலா 1 ஸ்பூன்
  8. உப்பு 3/4 ஸ்பூன்
  9. தேங்காய் முந்திரி விழுது 4 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை ,கொத்தமல்லித்தழை
  11. எண்ணெய் 30 மில்லி
  12. நெய் 1 ஸ்பூன்
  13. சீரகம் 1/2 ஸ்பூன்
  14. தோசை மாவு

வழிமுறைகள்

  1. காளான், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ,தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கிய பின் உப்பு, மஞ்சள் தூள், சிக்கன் மசாலா சேர்த்து கிளறவும்.
  4. காளான் சேர்த்து கிளறவும்
  5. தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்
  6. தண்ணீர் ஊற்ற வேண்டாம். மூடி வைத்து குறைந்த தீயில் கெட்டியாகும் வரை விடவும்.
  7. நெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்
  8. தோசை ஊற்றி பாதி அளவுக்கு காளான் மசாலாவை தடவவும்
  9. மடக்கி இரு புறமும் சிவந்த பின் விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்