வீடு / சமையல் குறிப்பு / கடல்பாசி சர்பத்

Photo of Broken Agar Agar Sarbath by Hameed Nooh at BetterButter
851
7
0.0(0)
0

கடல்பாசி சர்பத்

Nov-15-2017
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடல்பாசி சர்பத் செய்முறை பற்றி

எங்கள் ஊரில் விசேஷமான நிகழ்வுகளிலும் இவ்தார் நேரத்திலும் பரிமாறும் இந்த குளிர்பானத்தை குழந்தைகள் இரண்டாவது முறையும் வேண்டும் என ஒருபோதும் கேட்க்காமல் இருப்பதில்லை. அவ்வளவு அழகாக நட்சத்திரங்கள் கண் சிமிட்டுவதை போன்று இருக்கும். கடல்பாசி உடல்சூட்டை தணித்து வயிற்று புண்ணை ஆற்றுவதால் தாராளமாக பருகக் கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஈத்
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் - 1/2 லிட்டர்
  2. கடல்பாசி -  10 கிராம்
  3. சக்கரை -  1/2 கப்
  4. ரோஸ் வாட்டர் - 3 மேசைக்கரண்டி
  5. நட்ஸ் - 1/4 கப்
  6. தண்ணீர் - 3 கப்
  7. ஃபுட் கலர்ஸ் - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சி சக்கரை போட்டு கலந்து குளிர வைக்கவும். 
  2. கடல்பாசியை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்த பின் கொஞ்சமாக சீனி போட்டு காய்ச்சி வடி கட்டிக் வைக்கவும்.
  3. அதில் விரும்பிய நிறங்களை தனித் தனியாக கலந்து தட்டுகளில் ஊற்றி ஆற வைத்து பத்து நிமிடங்கள் கழிந்ததும் சிறிது சிறிதாக வெட்டவும்.
  4. குளிர்ந்த பாலில் ரோஸ் வாட்டர் மற்றும் மெல்லிதாய் நறுக்கிய நட்ஸ்  மற்றும் கடல்பாசியை சேர்த்து கலக்கவும். நட்ஸை கொர கொரப்பாக அரைத்தும் போடலாம்.
  5. நன்னாரி சர்பத் அல்லது ரூஹப்ஸா சிரப் கலந்தும் பருகலாம். அருமையான குழந்தைகளை கவர்ந்திழுக்கும் அழகான சர்பத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்