Photo of Falooda by fathoom hameed at BetterButter
861
5
0.0(0)
0

ஃபலூடா

Nov-16-2017
fathoom hameed
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஃபலூடா செய்முறை பற்றி

பலூடா அனைத்து வகையான சத்தான பொருட்களை கொண்டு செய்யப்பட்ட ஒரு உணவு. இது சுவையாகவும் பல வண்ணங்களில் கவரக்கூடியதாகவும் இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தண்ணீர் 1/4 லிட்டர்
  2. கடற்பாசி 3 கிராம்
  3. சர்க்கரை 2 மேஜைக்கரண்டி
  4. சப்ஜா விதை 4 மேஜைக்கரண்டி
  5. பாதாம் பிஸின் பொடித்தது 4 மேஜைக்கரண்டி
  6. நன்னாரி சர்பத் 6 மேஜைக்கரண்டி
  7. ஆப்பிள் 1/2
  8. மாம்பழம் 1/2
  9. வாழைப்பழம் 1
  10. பால் 1/4 லிடர்
  11. மில்க் மெய்ட் 4 மேஜைக்கரண்டி
  12. ஐஸ் கிரீம் 200மில்லி லிடர்
  13. பாதாம்,பிஸ்தா,முந்திரி 100கிராம்

வழிமுறைகள்

  1. தண்ணீரில் கடற்பாசி,சர்க்கரை மற்றும் 4 மேஜைக்கரண்டி நன்னாரி சர்பத் ஊற்றி கரைத்து நன்றாக கொதி வந்ததும் அடுப்பை அனைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி 3/4 மணி நேரம் பிரிஜட்ஜ்ஜில் வைத்து சிறு தூண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  2. பாலை சுண்ட காய்சி மில்க்மெய்ட் சேர்த்து பிரிஜட்ஜ்ஜில் வைக்கவும்.
  3. பாதாம் பிஸின், சப்ஜா விதை இரண்டையும் முந்தியநாள் இரவே தண்ணீரில் ஊர வைத்து நன்கு ஊரியதும் பிரிஜட்ஜ்ஜில் வைக்கவும்.
  4. ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  5. பாதாம்,பிஸ்தா,முந்திரி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  6. நீளமான கிலாஸில் முதலில் வெட்டி வைத்த கடற்பாசி துண்டுகளை போடவும்.
  7. அதன் மேல் ஊறவைத்த சப்ஜா விதை,பாதாம் பிஸின் போட்டு 1/2 மேஜைக்கரண்டி நன்னாரி சர்பத் ஊற்றவும்.
  8. அதன் மேல் நறுக்கிய பழங்களை போட்டு சுண்டக்காய்சிய பாலை ஊற்றவும்..இதே போல் இன்னொறு அடுக்கு செய்யவும்.
  9. இறுதியாக ஐஸ்கிரீம் வைத்து அதன் மேல் அரிந்த பருப்புகளை போட்டு கூலாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்