வீடு / சமையல் குறிப்பு / நவரத்ன சுண்டல்

Photo of Navarathna Sundal by Hameed Nooh at BetterButter
689
3
0.0(0)
0

நவரத்ன சுண்டல்

Nov-16-2017
Hameed Nooh
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நவரத்ன சுண்டல் செய்முறை பற்றி

ஒரே வகை கடலை மற்றும் பயிர் வகைகளில் சுண்டல் செய்தாலும் இதில் ஒன்பது வகை பயிர்களின் சத்தும் கிடைப்பதோடு பல வண்ணங்களில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவித்த கடலைகள் - 1 கப்
  2. தேங்காய் - 4 மேசைக்கரண்டி
  3. கேரட் - 1 ( துறுவியது )
  4. வெங்காயம் - 1 ( பொடிதாக நறுக்கியது )
  5. மாங்காய் - பாதி ( பொடிதாக நறுக்கியது )
  6. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. தாளிக்க:
  9. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  10. கடுகு - 1 தேக்கரண்டி
  11. உளுந்து - 1 தேக்கரண்டி
  12. வத்தல் - 1
  13. கருவேப்பிலை - கொஞ்சம்

வழிமுறைகள்

  1. கடலைகளில் சிலது சீக்கிரமாக வெந்து விடும் சிலது தாமதமாகும் மேலும் அதிக நேரம் ஊற வைக்கவும் வேண்டும்.
  2. எனவே இவைகளில் மொச்சை, காராமணி, ராஜ்மா, கறுப்பு மற்றும் வெள்ளை கொண்டைக்கடலை ஆகியவற்றை முதல் நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேகவிடவும்.
  3. கொள்ளு, பாசிப்பருப்பு, பச்சை மற்றும் வெள்ளைப்பட்டாணி ஆகியவற்றை உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக் கட்டவும்.
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க சொல்லிய அனைத்தையும் போட்டு தாளிக்கவும்.
  5. அத்தோடு அவித்த கடலைகளைப் போட்டு தேவையான மிளகாய் மற்றும் உப்பு தூள்,துருவிய தேங்காய் சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.
  6. பரிமாறும் போது உங்கள் விருப்பத்நிற்கேற்ப பொடிதாய் நருக்கிய கேரட்,வெங்காயம்,மாங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்