வீடு / சமையல் குறிப்பு / ராகி சுரைக்காய் அடை

Photo of Ragi bottle guard adai by saranya sathish at BetterButter
584
2
0.0(0)
0

ராகி சுரைக்காய் அடை

Nov-16-2017
saranya sathish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி சுரைக்காய் அடை செய்முறை பற்றி

ராகி மாவு சுரைக்காய் வைத்து செய்யபட்ட சுலபமாக அடை. காலை அல்லது மாலை உணவாக உண்ணலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு - 1 கப்
  2. பொடியாக நருக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கப்
  3. பச்சை மிளகாய் -1
  4. கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிது
  5. துருவிய சுரைக்காய் - 1/2 கப்
  6. உப்பு
  7. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு தட்டில் ராகி மாவு, உப்பு, வெங்காயம், துருவிய சுரைக்காய், சிறிதாக நருக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், நருக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
  2. வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து ஒரு மென்மையான மாவை தயார் செய்யவும்.
  3. ஒரு வாழை இலை மீது எண்ணெய் தடவி ஒரு ராகி மாவு உருண்டையை வைத்து விரல்களால் சமமாக பரப்பவும்.
  4. பின் தவாவை சூடாக்கி, தட்டிய அடையை போடவும். அடையை சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேகவிடவும். பின் திருப்பி போட்டு வேகவிடவும்.
  5. தயிருடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்