வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய கிரீமி ஸ்டிக்

Photo of Grains creamy stick by Saranya Kapildev at BetterButter
718
5
0.0(0)
0

சிறுதானிய கிரீமி ஸ்டிக்

Nov-17-2017
Saranya Kapildev
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய கிரீமி ஸ்டிக் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான சத்து உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொண்டைக்கடலை 1/2 கப்
  2. பட்டாணி 1/2 கப்
  3. ஏதாவது ஒரு வகை சிறுதானியம் 1/2 கப்
  4. சோயா பீன்ஸ் 1/2 கப்
  5. கேரட் 4
  6. இஞ்சி சிறு துண்டு
  7. பூண்டு 4 பல்
  8. பச்சை மிளகாய் 4
  9. வெங்காயம் 2
  10. மிளகாய் தூள் சிறிது
  11. கரம் மசாலா சிறிது
  12. தயிர் 1 மேசை கரண்டி
  13. உப்பு தேவையான அளவு
  14. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதல் நாள் இரவே தானியங்களை ஊற வைக்க வேண்டும்.
  2. மறுநாள் ஊற வைத்த தானியங்கள் அனைத்தும் நல்ல பதமாக வேக வைத்து கொள்ள வேண்டும்.
  3. பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வேக விடவும்.
  6. மசாலா வெந்த உடனே வேக வைத்த தானிய வகைகளை சேர்த்து கிளறவும்.
  7. மசாலா நன்கு சேர்ந்த ஆற விடவும்.
  8. ஆறிய பிறகு அதை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைக்கவும்.
  9. பிறகு கேரட்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும்.
  10. கலவையோடு கேரட் தொட்டு சாப்பிட வேண்டும்.
  11. காரம் விரும்பாத குழந்தை களுக்கு பாலுடன் கோகோ பவுடர் ,வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கொதிக்க வைத்து அவித்த சிறு தானிய வகைகளை மிக்ஸியில் அரைத்து சேர்த்து வேக வைத்தும் கொடுக்கலாம்.
  12. கேரட் தவிர பழ வகைகளை யும் பயன் படுத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்