வீடு / சமையல் குறிப்பு / தக்காளி நூடுல்ஸ் சூப்

Photo of Tomato Noodles Soup by Hameed Nooh at BetterButter
380
3
0.0(0)
0

தக்காளி நூடுல்ஸ் சூப்

Nov-17-2017
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி நூடுல்ஸ் சூப் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் மற்றும் சூப் நன்கு பிரியமானது. எனவே அதை இரண்டையும் சேர்த்தே காலை உணவாகக் கொடுக்க இது மிகவும் எளிதான சமையல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மெக்ஸிகன்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி - 300 கிராம்
  2. நூடுல்ஸ்  - 200 கிராம்
  3. சோள மாவு  - 1 மேசைக்கரண்டி
  4. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
  5. துருவிய சீஸ் - 2 மேசைக்கரண்டி
  6. வெண்ணெய் -  தாளிக்க
  7. உப்பு - சுவைக்கேற்ப
  8. பால் - 1/2 கப்
  9. பல்லாரி - 2
  10. மல்லித்தழை - சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளியுடன் பாதி அளவு நறுக்கிய பல்லாரியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  2. ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு சூடானதும் மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியதும் அரைத்த தக்காளி கலவையை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  4. சோளமாவை பாலில் கரைத்து சூப்பில் ஊற்றி மிளகுத்தூள் உப்பு சுவைக்கேற்ப சேர்க்கவும்.
  5. இறுதியாக வேக வைத்த நூடுல்ஸை சூப்பில் போட்டு 1 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கி துருவிய சீஸ் மற்றும் மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்