வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி சேமியா பாயசம்

Photo of Javvarisi Semiya Payasam by Rabia Hamnah at BetterButter
987
4
0.0(0)
0

ஜவ்வரிசி சேமியா பாயசம்

Nov-17-2017
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி சேமியா பாயசம் செய்முறை பற்றி

ஜவ்வரிசி குளிர்ச்சியை தூன்டும் ஒன்று. சூட்டை தனிக்கும். ஜவ்வரிசி உடனே வேக வேண்டும் என்றால் ஊர வைக்காமல் கொஞ்சம் நெய் ஊற்றி அதில் வறுத்தால் உடனே வெந்துவிடும்.

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஜவ்வரிசி- 2 டேபிள் ஸ்பூன்
  2. பாயாசம் சேமியா- 2 டேபிள் ஸ்பூன்
  3. ரவை- 1 டேபிள் ஸ்பூன்
  4. தேங்காய் தலை பால்- 1 டம்ளர்
  5. தேங்காய் இரண்டாம் பால்- 2 டம்ளர்
  6. பால்-1 டம்ளர்
  7. சீனி- 4 டேபிள் ஸ்பூன்
  8. ஏலம் பொடி -1/2 ஸ்பூன்
  9. நெய்- தேவைக்கு
  10. முந்திரி - 8 பாதாம் - 8 (அரைக்க)
  11. முந்திரி, கிஸ்மிஸ் - தாளிக்க கொஞ்சம்

வழிமுறைகள்

  1. முந்திரி மற்றும் பாதாமை பால் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். ரவையை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
  2. பின்பு ஜவ்வரிசியை அலசி எடுத்து 30 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் சேமியா சேர்த்து இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும். 3/4 பதம் வெந்ததும் ரவையை சேர்க்கவும். ஏலம் பொடி சேர்க்கவும்.
  3. பின்பு சீனி சேர்க்கவும். கெட்டி தேங்காய் பால் மற்றும் பால் சேர்த்து கின்டி விடவும்.
  4. நன்றாக வெந்ததும் அரைத்த விழுதை சேர்க்கவும். மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி கிஸ்மிஸை தாளித்து கஞ்சியுடன் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்