வீடு / சமையல் குறிப்பு / அன்னாசிப்பழ கேசரி

Photo of Pineapple Kesari by Hameed Nooh at BetterButter
388
4
0.0(0)
0

அன்னாசிப்பழ கேசரி

Nov-18-2017
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அன்னாசிப்பழ கேசரி செய்முறை பற்றி

இனிப்பு என்றால் நம் நினைவில் வரும் பட்டியலில் கேசரியும் தவறாமல் இடம்பெறும். அதிலும் கூடுதலாக குழந்தைகளுக்கு பிடித்த அன்னாசிப்பழம் சேர்க்கும் போது சுவையும் மணமும் மனம் கவரும் என்பதில் சந்தேகமில்லை. அன்னாசிப்பழத்தை வேக வைப்பதால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் வாய்ப்பும் இல்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை - 1 கப்
  2. சர்க்கரை - 1 கப்
  3. தண்ணீர் - 3 கப்
  4. நறுக்கிய அன்னாசிப்பழம் - 1 கப்
  5. நெய் - 4 மேசைக்கரண்டி
  6. முந்திரி - 10
  7. முந்திரி பழம் - 1 மேசைக்கரண்டி
  8. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  9. குங்குமப்பூ - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அன்னாசிப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர்,சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றோடு சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி,ரவை,ஏலக்காய் தூள் ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  3. நன்கு வெந்த அன்னாசிப்பழ கலவையை ரவையுடன் கலந்து கட்டி இல்லாமல் கிளறவும்.
  4. ரவை தண்ணீர் இல்லாமல் இறுகிய உடன் முந்திரி பழத்தை சேர்த்து நான்கு நிமிடம் மிதமான சூட்டில் வைத்தால் கமகமக்கும் அன்னாசிப்பழ கேசரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்