Photo of Arabian Chicken Shawarma by Hameed Nooh at BetterButter
2629
3
0.0(1)
0

Arabian Chicken Shawarma

Nov-18-2017
Hameed Nooh
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கனை ஊற வைப்பதற்கு:
  2. சிக்கன் - 500 கிராம் (எலும்பில்லாதது)
  3. தயிர் - 4 மேசைக்கரண்டி
  4. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  5. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  6. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  7. ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  8. இஞ்சிபூண்டு விழுது- 1மேசைக்கரண்டி
  9. உப்பு - சுவைக்கேற்ப
  10. பூண்டு சாஸ் செய்வதற்கு:
  11. தயிர் - 1 கப்
  12. பூண்டு - 10
  13. எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
  14. மிளகுத்தூள்- சுவைக்கேற்ப
  15. உப்பு - சுவைக்கேற்ப
  16. சவர்மா செய்வதற்கு :
  17. பீட்டா ரொட்டி - 4
  18. நறுக்கிய வெங்காயம் - 1
  19. நறுக்கிய தக்காளி - 1
  20. ரொட்டி செய்வதற்கு:
  21. கோதுமை மாவு - 2 கப்
  22. ஈஸ்ட் - 1 தேக்கரண்டி ( ஆக்டிவேடட் )
  23. உப்பு - சுவைக்கேற்ப
  24. சீனி - 1 தேக்கரண்டி
  25. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ரொட்டி செய்வதற்கான அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து பிசைந்து துணி போட்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும்.
  2. பிறகு மாவை கையால் அழுத்தி காற்றை வெளியாக்கி சம பாகமாக பிரித்தெடுத்து கொஞ்சம் கெட்டியாகவும் வட்டமாகவும் வளர்க்கவும்.
  3. தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் விட்டு ரொட்டியை போட்டு சிறிய குமிளிகள் மேலே தோன்றியதும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
  4. சிக்கனை ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5. சாஸ் செய்ய கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் கலந்து வைக்கவும்.
  6. வாணலியில் எண்ணெய் விட்டு சிக்கனை போட்டு வேக விடவும்.
  7. பிறகு ரொட்டியில் சாஸை பரப்பி சிக்கன் நறுக்கிய வெங்காயம், தக்காளி வைத்து சுருட்டி பாதியாக வெட்டி சாப்பிடவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Nov-18-2017
Saranya Manickam   Nov-18-2017

ஆலிவ் ஆயில் பதில் எந்த எண்ணெய் உபோயோகப்படுத்தலாம்?

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்