காசி அல்வா | White pumpkin / Ash gourd halwa (kasi halwa) in Tamil

எழுதியவர் Rajeswari Annamalai  |  18th Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of White pumpkin / Ash gourd halwa (kasi halwa) by Rajeswari Annamalai at BetterButter
காசி அல்வாRajeswari Annamalai
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

3

0

காசி அல்வா

காசி அல்வா தேவையான பொருட்கள் ( Ingredients to make White pumpkin / Ash gourd halwa (kasi halwa) in Tamil )

 • 3/4 கிலோ வெள்ளை பூசணி
 • 3/4 கப் பூசணி தண்ணீர்
 • 1 1/4 கப் ஆர்கானிக் சர்க்கரை
 • 1/4 கப் நெய்
 • 10 முழு முந்திரி
 • தேவைப்பட்டால் லெமன் யெல்லோ ஃபுட் கலர்
 • 1/8 தேக்கரண்டியளவு ஏலக்காய் தூள்
 • 1/8 தேக்கரண்டியளவு குங்குமப்பூ

காசி அல்வா செய்வது எப்படி | How to make White pumpkin / Ash gourd halwa (kasi halwa) in Tamil

 1. வெள்ளை பூசணிக்காயை கழுவி தோல் நீக்கி, கொட்டைகளை நீக்கி கொள்ளவும்
 2. பிறகு அதனை துண்டு செய்து துருவி கொள்ளவும்
 3. துருவியதை வடித்து நீரை தனியாக எடுத்து வைக்கவும் (சுமார் 3/4 கப் பூசணி தண்ணீர் மற்றும் 1 3/4 கப் பூசணி கிடைக்கும்)
 4. முந்திரியை இரண்டாக்கி 1 தேக்கரண்டியளவு நெய்யில் வறுத்து எடுக்கவும்
 5. ஒரு ப்ரெஷர் பானில், 1 தேக்கரண்டியளவு நெய்யில் துருவி வடித்த பூசணியை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
 6. பின்னர் பூசணி தண்ணீர் சேர்த்து மூடி, 2 அல்லது 3 விசில் வரை பெரிய ப்லேமில் வேகவைத்து, அதனுடன் ஃபுட் கலர் மற்றும் குங்குமப்பூ சேர்த்து மீடியம் ப்லேமில் வைக்கவும்
 7. இதில் தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்
 8. பின்னர் சர்க்கரை, நெய் சேர்த்து கலக்கவும்
 9. நெய் ஓரங்களில் பிரியும் வரை வதக்கவும்
 10. பின்னர் அடுப்பை அணைத்து, முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்
 11. அல்வா ரெடி

Reviews for White pumpkin / Ash gourd halwa (kasi halwa) in tamil (0)