வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் கேரட் தோசை

Photo of Oats carrot dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
353
2
0.0(0)
0

ஓட்ஸ் கேரட் தோசை

Nov-18-2017
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ் கேரட் தோசை செய்முறை பற்றி

ஓட்ஸை எப்போதுமே கஞ்சியாகவே குடிப்பதற்கு பதிலாக தோசையாக செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். கஞ்சியின் கொழகொழப்புதன்மை தோசையில் இருக்காது. நல்ல முறுமுறு என்று வரும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒட்ஸ் - 3 கப்(60 மிலி கப்)
  2. ரவை - 1 கப்
  3. அரிசி மாவு - 2 கப்
  4. தயிர் - 2 கப்
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. மிளகு சீரக பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. இஞ்சி - 1 சிறிய துண்டு
  8. பச்ச மிளகாய் - 1
  9. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  10. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  11. கேரட் - 1 (துருவிக்கொள்ளவும்)
  12. பெருங்காயம் - 1 சிட்டிகை
  13. எண்ணெய் - தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட அளவில் ஓட்ஸ், அரிசி மாவு, ரவை, தயிர் உப்பு சேர்த்து கலக்கவும்
  2. தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக்கொள்ளவும்
  3. மிளகு சீரக பொடி, பெருங்காயம், பச்ச மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, கருவேப்பிலை (பொடியாக நறுக்கியது) கேரட் துருவல் சேர்த்து கலக்கவும் இந்த கலவையை இருபது நிமிடங்கள் ஊறவிடவும்
  4. தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து ரவாதோசை பதத்திற்கு நீர்க கரைத்து மாவை தோசைகல்லில் வார்க்கவும். தேவையான அளவு எண்ணெய் விடவும் .தட்டையான தோசை கல் உபயோகப்படுத்தலாம்
  5. அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும். நல்ல முறுமுறு என்று தோசை வரும் ஓடஸ் கேரட் தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்