வீடு / சமையல் குறிப்பு / தேன் மிட்டாய்

Photo of Thaen mittai by Rabia Hamnah at BetterButter
1254
4
0.0(0)
0

தேன் மிட்டாய்

Nov-18-2017
Rabia Hamnah
135 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேன் மிட்டாய் செய்முறை பற்றி

தேன் மிட்டாய் யாருக்குதான் பிடிக்காது. சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் மிட்டாய்.

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி-1 கப்
  2. உளுந்து-1/4 கப்
  3. தயிர்- 3 ஸ்பூன்
  4. கேசரி கலர்- 1 சிட்டிகை
  5. சர்க்கரை-1 1/4கப்
  6. ஆப்ப சோடா-ஒரு சிட்டிகை
  7. எண்ணெய் –தேவையான அளவ
  8. உப்பு-1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சரிசி மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து, பின் இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்.
  2. தயிர்,ஆப்ப சோடா, கேசரி கலர் மற்றும் உப்பு சேர்த்து மீன்டும் அரைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கம்பி பதம்(1St string) வரும்வரை காய்ச்சி, இறக்கி வைக்கவும்.
  4. மாவை சிறுசிறு உருண்டைகளாகக் சின்ன ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வெந்து பொறிந்தவுடன் எடுத்து சர்க்கரைப் பாகில் ஊறவைக்கவும்.
  5. 15 நிமிடம் கழித்து ஊறிய மிட்டாயை பாகில் இருந்து எடுத்து வடிகட்டி உலர வைத்தால், சுவையான ஆரோக்கியமான தேன் மிட்டாய் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்