வீடு / சமையல் குறிப்பு / ஹோம்மேட் ரோஸ்மில்க்

Photo of Home made rosemilk by Krishnasamy Vidya Valli at BetterButter
391
2
0.0(0)
0

ஹோம்மேட் ரோஸ்மில்க்

Nov-18-2017
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஹோம்மேட் ரோஸ்மில்க் செய்முறை பற்றி

சில்லுனு கொடுத்தால் குழந்தைகள் பால் கூட குடிப்பார்கள். வீட்டில் தயாரிக்கும் போது பிரிஸர்வேட்டிவ்ஸ் உபயோகபடுத்தாமல் இருப்பதால் உடலுக்கு தீங்கு இல்லை. பாலும் உடலுக்குள் சேரும். வெயில் காலத்தில் ஐஸ்கட்டிகள் போட்டு கொடுக்கலாம் வீட்டில் தயாரிப்பது மிகமிக சுலபம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சீனி - 1 கப்
  2. ரோஸ் எஸன்ஸ் - 1 தேக்கரண்டி
  3. ரோஸ் கலர் (ராஸ்பரிரெட்) - 1 சிட்டிகை
  4. பால் - 1 லிட்டர்
  5. அலங்கரிக்க (விருப்பப்பட்டால் செரி சாக்கோ சிபாஸ் ஸ்ப்ரிங்கில்ஸ் டிரை ப்ரூட்ஸ்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு கப் தண்ணீர் விட்டு சீனி சேர்த்து அடுப்பில் வைக்கவும்
  2. கம்பிப்பதத்திற்கு முன்தய பதத்தில் இருக்கும் போது கலர் சேர்க்கவும்
  3. இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
  4. ஆறியதும் ரோஸ் எஸன்ஸ் சேர்க்கவும்
  5. கண்ணாடி பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைத்து கொள்ளவும்
  6. தேவைப்படும் போது பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
  7. விருப்பப்பட்டால் டிரை ப்ரூட்ஸ் ஸ்பிங்கிள்ஸ் சாக்கோ சிப்ஸ் கொண்டு அலங்காரம் செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்