வீடு / சமையல் குறிப்பு / கலிடோஸ்க்கோப் புரோக்கன் ஜெல்லி புடிங்

Photo of kaleidoscope broken glass jelly pudding by Saroja Kumararaja at BetterButter
825
2
0.0(0)
0

கலிடோஸ்க்கோப் புரோக்கன் ஜெல்லி புடிங்

Nov-19-2017
Saroja Kumararaja
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கலிடோஸ்க்கோப் புரோக்கன் ஜெல்லி புடிங் செய்முறை பற்றி

மிகக் குறைந்த சமையல் நேரத்தில் எளிமையான டெஸேர்ட்.(dessert)

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. ஜெல்லி தேவையான பொருட்கள்: பழச்சாறு(சர்க்கரை கலந்தது) 1 3/4 கப் தண்ணீர்
 2. 1/4 கப் ஜெலட்டின் 1 டேபிள்ஸ்பூன் அல்லது அகர்அகர் 5 கிராம்
 3. கிரீம் தயாரிக்க: கன்டென்ஸ்டு மில்க் - சிறிய டின்(400கிராம்)
 4. தண்ணீர் - 1/2 & 1கப் (அல்லது பால்+தண்ணீர் தலா 1/2கப்)
 5. ஜெலட்டின் - 2டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. ஜெல்லி செய்முறை: நீரில் ஜெல்லட்டின் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
 2. பின் இளஞ்சூட்டில் இளக்கி கொதி வந்ததும் 3/4 பழச்சாறை அதில் ஊற்றி மிதமாக சூடாக்கவும்.
 3. அடுப்பில் இருந்து இறக்கி பின் மீதமுள்ள பழச்சாறை கலந்து விட்டு அச்சில் ஊற்றி குளிர வைக்கவும்.
 4. அல்லது....... விருப்பமான நான்கு சுவைகளில் ஜெல்லோ மிக்ஸ் பாக்கெட்டுகள். வாங்கி, பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறைப்படி முதல் நாளே தனித்தனியாக தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
 5. கிரீம் செய்முறை: 1/2 கப் தண்ணீரில் ஜெலட்டினை கலந்து 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின் இளஞ்சூட்டில்/ மைக்ரோவேவில் வைத்து ஜெலட்டின் கரையும் வரை சூடாக்கவும்.
 6. 1கப் தண்ணீர் + க.மில்க்கை நன்கு கலக்கவும். அதில் ஜெலட்டின் கலவையை ஊற்றி நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஆற விடவும்.
 7. இடைப்பட்ட நேரத்தில் பதப்படுத்திய குளிர்ந்த ஜெல் கலவைகளை சிறு சிறு துண்டுகளாக்கி கலந்து கொண்டு விருப்பமான அச்சின் அடிப்பாகத்தில் பரவி விட்டு அதன் மேல் க.மில்க் கலவையை ஊற்றவும்.
 8. அச்சினை மூடி அதிஉறை பாகத்தில்(deep freezer) 15 நிமிடம் வைக்கவும்.
 9. பின் சாதாரண குளிர்நிலைக்கு மாற்றவும்.(refrigerate)
 10. 5 மணி நேரம் கழித்து அச்சில் இருந்து எடுத்து பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்