Photo of Chicken rolls by Rabia Hamnah at BetterButter
656
3
0.0(1)
0

Chicken rolls

Nov-19-2017
Rabia Hamnah
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு-4 (வேக வைத்து மசித்தது)
  2. ப.பட்டானி-1கப் ( வேக வைத்தது)
  3. வெங்காயம்- 3 (பொடியாக நறுக்கியது)
  4. வேக வைத்த சிக்கன்-200 கிராம்
  5. இஞ்சி பூடு விழுது-2 ஸ்பூன்
  6. மிளகாய் பொடி-3 ஸ்பூன்
  7. கரம் மசாலா-1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
  9. சீரக தூள்-2 ஸ்பூன்
  10. எண்ணெய்-தாளிக்க + பொறிப்பதற்கு
  11. உப்பு- தேவைக்கு
  12. பிரட் கிரம்ஸ்- பிரட்டுவதற்கு
  13. முட்டை-2
  14. சமோசா(ரோல்) ஷீட்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் வெங்காயம் போட்டூ வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்க்கவும். பச்சை வாசனை போக நன்கு வதக்கி உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்க்கவும்.
  2. பின்பு சிக்கனை கையால் பிசைந்து சேர்க்கவும்.உ.கிழங்கு மற்றும் பட்டானியை சேர்த்து கிளறி மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
  3. ரோலிற்கு தேவையான மசாலா தயார்.
  4. முட்டையை அடித்து வைத்து கொள்ளவும் பிரட் தூளை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்
  5. ரோல்ஸ் செய்முறை: ஒரு ஷீட்டை எடுத்து உள்ளே மசாலா வைத்து ரோல் போல் சுற்றி கரைகளில் மைதா மற்றும் தண்ணீர் சேர்த்து பசைபோல் தொட்டு ஒட்டி கொள்ளவும்.
  6. இப்படி அனைத்தையும் செய்துவைத்து முட்டையில் முக்கி பிரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இப்படி எல்லாவற்றையும் செய்யவும்.
  7. சுவையான சிக்கன் ரோல்ஸ் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Jeyakalyani Jeyabalan
Sep-02-2018
Jeyakalyani Jeyabalan   Sep-02-2018

ரோல்ஸ் ஷீட் எப்படி தயார் செய்ய வேண்டும்?

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்