வீடு / சமையல் குறிப்பு / அவல் வெஜிடபிள் பால்ஸ்

Photo of Poha vegetable balls by Krishnasamy Vidya Valli at BetterButter
438
2
0.0(0)
0

அவல் வெஜிடபிள் பால்ஸ்

Nov-19-2017
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

அவல் வெஜிடபிள் பால்ஸ் செய்முறை பற்றி

பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு அருமையான ஆரேக்கியமான ஸ்நாக்ஸ் வகை இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. தட்டை அவல்/ கெட்டி அவல்/சிவப்பு அவல் - 1 கப்
  2. காய்கள் - வெங்காயம் பச்சை பட்டாணி கேரட் குடைமிளகாய் பொடியாக நறுக்கியது - 3/ 4 கப்
  3. கார்ன்பிளவர்/ அரிசி மாவு/கடலைமாவு - 4 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி, காஷ்மீர் சில்லிபவுடர், ஆம்சூர் பவுடர், கரம் மசாலா பொடி - தலா அரை தேக்கரண்டி
  5. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி + 2 சிட்டிகை
  6. எண்ணெய் - குழிபணியார கடாயில் விடுவதற்கு தேவையான அளவு
  7. அவல் பொடி /பிரட்கிரம்ப்ஸ் - 10 தேக்கரண்டி (அவலை டிரையாக மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும் )
  8. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. உருளைகிழங்கை வேக வைக்கவும்
  3. லேசான அவலாக இருந்தால் தண்ணீர் விட்டு களைந்து 5 நிமிடங்கள் கழித்து எடுக்கவும். கெட்டி அவலாக இருந்தால் அரைமணிநேரம் ஊறவைக்கவும்
  4. அவலில் மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி, காஷ்மீர் சில்லிபவுடர், ஆம்சூர் பவுடர் உப்பு, 2 தேக்கரண்டி கான்பிளவர்/கடலைமாவு / அரிசி மாவு சேர்த்து கலக்கவும்
  5. பின்னர் உருளைகிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளவும், மற்ற காய்களையும் சேர்த்து நன்றாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  6. மீதமுள்ள 2 தேக்கரண்டி கான்பிளவர் / கடலைமாவு / அரிசி மாவு வில் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு கரைத்துக்கொள்ளவும்.
  7. பால்களை இந்த கலவையில் பிரட்டி எடுத்தபின் அவல் பொடி / பிரட்கிரம்ப்ஸ் - ல் ஒற்றி எடுக்கவும்
  8. குழிபணியார கடாயில் எண்ணெய் விட்டு இந்த பால்ஸ்களை ஷாலோ பிரை செய்து எடுக்கவும்
  9. ஒருபுறம் வெந்ததும் பால்ஸ்ஸை திருப்பி கொடுக்கவும்
  10. சாஸுடன் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு சுவையான அவல் வெஜிடபிள் பால்ஸ் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்