வீடு / சமையல் குறிப்பு / ப்ரட் பீட்ஸா மற்றும் பழ கப்ஸ்

Photo of Bread Pizza And Fruit Cups by Hameed Nooh at BetterButter
401
4
0.0(0)
0

ப்ரட் பீட்ஸா மற்றும் பழ கப்ஸ்

Nov-20-2017
Hameed Nooh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ப்ரட் பீட்ஸா மற்றும் பழ கப்ஸ் செய்முறை பற்றி

வீட்டிலேயே பீட்ஸா பேஸ் இல்லாமல் எளிமையாக செய்யும் இந்த பீட்ஸா கப்ஸ் கண்டிப்பாக குழந்தைகளிடம் நமக்கு வாவ் பெற்றுத்தரும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்டிர் ஃபிரை
  • பேக்கிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ப்ரட் துண்டுகள் - 10
  2. வெங்காயம் -1
  3. தக்காளி - 1
  4. காரட் - 1
  5. குடை மிளகாய் - 1
  6. பூண்டு பற்கள் - 3
  7. மிளகு தூள்  - 1/2 தேக்கரண்டி
  8. தக்காளி சாஸ் - 1 கப்
  9. சீஸ் - 1  கப்
  10. உப்பு - தேவையான  அளவு
  11. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கறிகள் அனைத்தையும் சிறிதாகவோ அல்லது நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  2. முதலில் எண்ணையை கடாயில் ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
  3. பிறகு அதில் தக்காளியை போட்டு நன்கு வேகும் வரை  வதக்கவும் . இப்பொது அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்.
  4. இப்பொது நறுக்கிய வெங்காயம் , குடை மிளகாய், காரட் சேர்த்து  சில  நிமிடங்கள் கிளறவும்.காய்கறிகள் நன்கு வேக வேண்டிய அவசியம் இல்லை.
  5. முதலில் ப்ரட்டின்  மீது வட்ட வடிவிலான மூடியை வைத்து அதனை சுற்றி வெட்டி எடுக்கவும். அதை எண்ணெய் தடவிய மவ்வின்ஸ் தட்டில் மெதுவாக வைக்கவும்.
  6. இப்பொது தயாரித்த காய்கறி கலவையை சாஸ் தடவிய ப்ரட் கப்பில் வைத்து மேலே துருவிய சீஸ் போடவும்.
  7. 200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் நான்கு நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான ப்ரட் பீட்ஸா கப் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்