வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சம் பழம் சேர்த்த கோதுமை தில்பசந்த் நான்

Photo of Dates whole wheat dilpasand naan by Rajeswari Annamalai at BetterButter
1671
2
0.0(0)
0

பேரிச்சம் பழம் சேர்த்த கோதுமை தில்பசந்த் நான்

Nov-20-2017
Rajeswari Annamalai
150 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சம் பழம் சேர்த்த கோதுமை தில்பசந்த் நான் செய்முறை பற்றி

தில்பசந்த் தேங்காய் நான் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு பேக் செய்யப்பட்ட உணவு. இதில் சத்து சேர்க்க பேரிச்சை பழம் மற்றும் பாதாம் உள்ளது. இது கோதுமை மாவில் செய்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 3/4 கப் கோதுமை மாவு
  2. 1 மேஜைக்கரண்டி பால் பவுடர்
  3. 3 மேஜைக்கரண்டி கார்ன் ப்லோர்
  4. 1 3/4 தேக்கரண்டியளவு இனஸ்டன்ட் ஈஸ்ட்
  5. 3 மேஜைக்கரண்டி கேஸ்டர் சர்க்கரை
  6. 1/4 தேக்கரண்டியளவு உப்பு
  7. 3/4 கப் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் பால் கலவை
  8. 1 1/2 மேஜைக்கரண்டி உருக்கிய வெண்ணெய்
  9. 1 மேஜைக்கரண்டி உருக்கிய வெண்ணெய் ப்ரஷ் செய்வதற்கு
  10. 1 மேஜைக்கரண்டி பால் ப்ரஷ் செய்வதற்கு
  11. ஃபில்லிங்:
  12. 1 மேஜைக்கரண்டி நெய்
  13. 1 கப் தேங்காய் துருவல்
  14. 1/8 கப் சர்க்கரை
  15. 1/2 கப் நறுக்கிய பேரிச்சம் பழம்
  16. 1/2 கப் டூட்டி ஃப்ரூட்டி
  17. 1/4 கப் நறுக்கிய பாதாம்
  18. 1/4 தேக்கரண்டியளவு ஏலக்காய் தூள்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, கார்ன் ப்லோர், பால் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்
  2. அதில் ஒரு பக்கம் உப்பு மறு பக்கம் சர்க்கரை சேர்க்கவும்
  3. பிறகு ஈஸ்ட் கலக்கவும்
  4. 1/4 + 1/8 கப் பால் மற்றும் 1/4+1/8 கப் தண்ணீர் சேர்த்து வெதுவெதுப்பான சூடு செய்து கொள்ளவும்
  5. இதை மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  6. பின்னர் உருக்கிய வெண்ணெய் சேர்த்து 5 நிமிடங்களுக்கு பிசைந்து கொள்ளவும். இப்போது கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும்
  7. பின்னர் ஒரு பாத்திரத்தில் லேசாக எண்ணெய் தடவி பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு உருண்டை வடிவில் செய்து வைத்து துணியை வைத்து மூடி வைத்து விடவும்
  8. மாவு 1 1/2 - 2 மணி நேரம் ஊறவைக்கவும். இது இரண்டு மடங்காக உயர வேண்டும்
  9. இதனிடையே ஃபில்லிங் தயார் செய்து கொள்ளவும்
  10. மாவு இரண்டு மடங்காக ஆனவுடன் பன்ச் செய்து 1 நிமிடம் பிசைந்து நான்கு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  11. பின்னர் ஒவ்வொரு உருண்டையை 1/4 இன்ச் திக்னெஸ் அளவு வட்டமாய் திரட்டி கொள்ளவும்
  12. பேக்கிங் ட்ரேயில் பார்ச்மென்ட் ஷுட் வைத்து அதன் மேல் திரட்டிய ஒரு வட்டத்தை வைத்து ஃபில்லிங் பரப்புங்கள்
  13. அதன்மேல் இன்னொரு வட்டத்தை வைத்து சிறு தண்ணீர கையில் நனைத்து சீல் செய்ய வேண்டும்
  14. நடுவில் ஒரு சிறிய துளை போட்டு, சைடு வாக்கில் லேசாக கிழிசல் போடவும்
  15. பாலை கொண்டு் ப்ரஷ் செய்து 160 டிக்ரீயில் 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும் (160 டிக்ரீ ப்ரீஹூட் செய்தவுடன்)
  16. பின்னர் வெளியே எடுத்து வெண்ணெய் கொண்டு ப்ரஷ் செய்து ஆறவிடவும்
  17. பிறகு ஸ்லைஸ் செய்து பரிமாறவும்
  18. ஃபில்லிங்:
  19. நெய் சூடாக்கவும் பின்னர் தேங்காய் துருவலை லேசாக வதக்கி அடுப்பை அணைக்கவும்
  20. அதனுடன் ஃபில்லிங் தேவையான மற்ற பொருட்கள் சேர்த்து கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்