வீடு / சமையல் குறிப்பு / பாசி பருப்பு மாவு பீட்சா

Photo of Moong dal Flour Pizza by saranya sathish at BetterButter
755
2
0.0(0)
0

பாசி பருப்பு மாவு பீட்சா

Nov-21-2017
saranya sathish
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசி பருப்பு மாவு பீட்சா செய்முறை பற்றி

பாசி பருப்பு மாவை வைத்து சுலபமாக செய்ய கூடிய சத்தான பீட்சா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வருத்து அரைத்த பாசி பருப்பு மாவு - 1 கப்
  2. கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு - சிறிது
  4. பேக்கிங் பவுடர் - சிட்டிகை
  5. நருக்கிய குடைமிளகாய் - 1
  6. நருக்கிய தக்காளி - 1
  7. சீஸ் - 1
  8. பீட்சா இட்டாலியன் சீசனிங் - 1 ஸ்பூன்
  9. தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பாசி பருப்பு மாவு, கோதுமை மாவு, உப்பு , பேக்கிங் பவுடர் சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பினையவும்.
  2. பின் 10 நிமிடம் அதை ஊறவைக்கவும்.
  3. பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக செய்யவும்.
  4. பின் சற்றே தடிமனான சப்பாத்திகளாக தேய்க்கவும்.
  5. ஒரு தவாவை சிறிது எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  6. தேய்த்து வைத்த பீட்சா பேசை தவாவில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும். பேச் சற்றே க்ரிஸ்பியாக இருக்க வேண்டும்.
  7. பேச் நன்றாக வெந்ததும் தக்காளி சாஸை தடவவும்.
  8. பின் தக்காளி, குடைமிளகாயை தூவவும்.
  9. மேலே துருவிய சீஸ், சீசனிங் சேர்க்கவும்.
  10. பின் தவாவை மூடி சீஸ் உருகும் வரை வேகவைத்து சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்