வீடு / சமையல் குறிப்பு / துருக்கி டிலைட்டு

Photo of Turkish Delight by Rifana Irfan at BetterButter
93
2
0.0(0)
0

துருக்கி டிலைட்டு

Nov-21-2017
Rifana Irfan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

துருக்கி டிலைட்டு செய்முறை பற்றி

துருக்கியிண் பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஐரோப்பிய
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரை -3 கப்பு
  2. கார்ன் மாவு- 3/4 கப்
  3. ஏலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
  4. அகர் அகர் / ஜலட்டின் 6 மேசைக்கரண்டி
  5. ரோஸ் வாட்டர்- 1 1/2 மேசைக்கரண்டி
  6. பாதாம், முந்திரி மற்றும் பிஸ்த்தா -1/4 கப்
  7. சிகப்பு கலர் - 4 சொட்டு
  8. ஐசிங் சுகர்-1 கப்

வழிமுறைகள்

  1. 10 நிமிடம் வரை அகர் அகர் ஐ சிறிது நீரில் ஊற வைத்து பின், அதை நன்றாக கரையும் வரை கொதிக்க வைக்கவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, 2 மேசைக்கரண்டி கார்ன் மாவும், எலுமிச்சை சாறு, ரோஸ் நீருடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. இந்த கலவையை கொதிக்க வைத்த அகர் அகர் நீருடன் சேர்த்து 20 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்க வேண்டும்.
  4. மற்றொரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த நீரில், பாதாம் பருப்பு, பிஸ்தா மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து 5 நிமிடங்களில் வடிகட்டி கொள்ளவும்.
  5. ஒரு ட்ரேயில் அலுமினிய ஃபாயில் / பட்டர் பேப்பரிட்டு அதில் சிறிது எண்ணெய் தடவி,அதில் கலவையை விடவும்.
  6. அதில் ரெட் கலரையும், நட்ஸையும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  7. 6 மணி நேரத்திற்கு பின், தட்டிலிருந்து அதை ஏடுத்து கார்ன் மாவு மற்றும் ஐஸிங் சுகர் கலவையை மேசையிலிட்டு ,தட்டை கமத்தி பேப்பரை நீக்கவும்
  8. பின்னர், ஐஸ்இங் சுகர் மற்றும் கார்ன்மாவு கலவையில் எல்லா புறமும் தோய்த்து எடுத்து துண்டு போடவும்
  9. கார்ன் மாவு ஐஸிங் சுகர் கலவையில் துண்டுகளை முக்கி எடுக்கவும்.
  10. சுவையான டர்கிஷ் டிலைட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்