வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பயறு பர்கர்

Photo of Sprouted Green gram Burgar by Vins Raj at BetterButter
806
3
0.0(0)
0

முளைக்கட்டிய பயறு பர்கர்

Nov-21-2017
Vins Raj
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பயறு பர்கர் செய்முறை பற்றி

பிள்ளைகளுக்கு  மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஆரோக்கியமான  உணவாகும்.  இதில் காய்கறிகள், முளைக்கட்டின பயிறு இதனுடன் தயிர் மற்றும் இனிப்புக்காக பனை வெல்லம் சேர்ந்த சுவையை  பிள்ளைகள் விரும்பி உண்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 1/2 கப் முளைகட்டிய பாசிப்பருப்பு
  2. 1/4 கப் நறுக்கிய உருளை கிழங்கு
  3. 1/4 கப் நறுக்கிய கேரட்
  4. 1/4 கப் நறுக்கிய பீட்ரூட்
  5. 1/2 தே.க. இன்ஸ்டன்ட் ஈஸ்ட்
  6. 1/2 தே.க. மிளகு தூள்
  7. 1/4 கப் பிரட் க்ரம்ப்ஸ் (ரொட்டி துகள்)
  8. 1/4 கப் கெட்டி தயிர் (நீர் மொத்தமாக வடிகட்டியது)
  9. 2 மே.க. அரிசி மாவு
  10. 2 மே. க.தேங்காய் துருவல்
  11. 1 வெங்காயம் வட்டமாக நறுக்கியது
  12. 1 தக்காளி வட்டமாக நறுக்கியது
  13. 2 மே .க. வெண்ணை
  14. 1/4 கப் பனை வெல்லம்
  15. 1 தக்காளி சிறிய துண்டுகளாக நறுக்கியது
  16. 4 பல் பூண்டு பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. முளைகட்டிய பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.
  2. 1 தே.க. தண்ணீர் விட்டு ஈஸ்ட் கலந்து, மாவில் தேவையான உப்புடன் சேர்த்து கலந்து 1/2 மணிநேரம் நொதித்த விடவும்.
  3. தயிரில் உப்பு கலந்து வைத்துக்கொள்ளவும்
  4. ப்ரெஷர் குக்கரில் உருளை கிழங்கு, காரட் மற்றும் பீட்ரூட்டை 1/4 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
  5. வெந்த காய்கறிகளை நன்றாக மசித்து, உப்பு, மிளகு தூள், அரிசி மாவை சேர்த்து வட்டமாக தட்டிக்கொள்ளவும்.
  6. பிரட் கிராம்ஸில் பிரட்டி வைத்துக்கொள்ளவும்.
  7. தோசை கல்லில் வெண்ணெய் சேர்த்து அதில் காய்கறி பட்டீஸ்களை இரண்டு பக்கமும் மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும்.
  8. வெளி பாகங்கள் மட்டும் மொறுமொறு என்று இருந்தால் போதும் காய்கறிகள் வெந்ததினால் அதிகம் வேக வைக்க தேவையில்லை
  9. நொதித்த மாவை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அல்லது வட்ட தட்டில் ஊற்றி ,ஆவியில் 15 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
  10. நன்றாக அறினவுடன் தட்டுகள் இருந்து எடுக்கவும் இல்லையென்றால் தட்டுடன் ஒட்டிக்கொண்டு பிட்டு கொள்ளும்
  11. பனை வெல்லத்தை 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டிக்கவும். வடிகட்டிய வெல்ல நீரை மீண்டும் அடுப்பில வைத்து அதில் நறுக்கிய தக்காளியையம் பூண்டையும் போட்டு கொதிக்க விடவும்.
  12. நீர் எல்லாம் வறண்டு பாகு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  13. இப்போது பர்கரை அடுக்கவேண்டும் . முதலில் ஒரு பாசிப்பருப்பு இட்லி வைத்து அதற்க்கு மேல் காய்கறி பட்டீஸ், அதற்கு மேல், பனை பாகை தடவி , பின்பு கெட்டி தயிர் பரப்பி விடவும்.
  14. அதற்க்கு மேல் வெங்காயம் மற்றும் தக்காளியை வைத்து இன்னொரு பாசிப்பருப்பு இட்லிவைத்து மூடவும்.
  15. தேங்காய் துருவல் கொண்டு மேலே தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்