வீடு / சமையல் குறிப்பு / கோதுமை சாக்லேட் கேக் வித் சாக்லேட் ப்ராஸ்டிங்

Photo of Wheat Chocolate Cake with Chocolate Frosting by Ayesha Ziana at BetterButter
1130
3
0.0(0)
0

கோதுமை சாக்லேட் கேக் வித் சாக்லேட் ப்ராஸ்டிங்

Nov-21-2017
Ayesha Ziana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை சாக்லேட் கேக் வித் சாக்லேட் ப்ராஸ்டிங் செய்முறை பற்றி

கோதுமை மாவில் செய்த குழந்தைகள் விரும்பும் சாக்லேட் கேக், சாக்லேட் ப்ராஸ்டிங் உடன்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாக்லேட் கேக் செய்ய: கோதுமை மாவு 1.5 கப்
  2. முட்டை 2
  3. கோகோ பவுடர் 1/2 கப்
  4. சீனி 1.5 கப்
  5. பால் 1 1/3 கப்
  6. எண்ணெய்/உருக்கிய வெண்ணெய் 1/3 கப் கு சற்று குறைவாக
  7. பேக்கிங் பவுடர் 3/4 ஸ்பூன்
  8. பேக்கிங் சோடா 1/3 ஸ்பூன்
  9. வெனிலா எஸ்ஸென்ஸ் 3/4 ஸ்பூன்
  10. ப்ராஸ்டிங் செய்ய: பொடித்த சீனி 1 கப்
  11. கோகோ பவுடர் 2 ஸ்பூன்
  12. வெனிலா எஸ்ஸென்ஸ் 1/2 ஸ்பூன்
  13. பால் 1/3 கப் அல்லது தேவைக்கு
  14. உருக்கிய வெண்ணெய் 1.5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேக் செய்ய: ஒரு பவுலில் கோதுமை மாவு, கோகோ பவுடர், சீனி(வேண்டுமென்றால் பொடித்து கொள்ளவும்), பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
  2. இன்னொரு பவுலில் முட்டை, எண்ணெய்/ உருக்கிய வெண்ணெய், வெனிலா எஸ்ஸென்ஸ், பால் சேர்த்து நன்றாக அடிக்கவும். இதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையுடன் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
  3. கேக் டின்னில் வெண்ணெய் தடவி, கேக் மாவை 3/4 டின் அளவு ஊற்றி, குக்கரில்/அவனில் 40 நிமிடங்கள் அல்லது நன்றாக வேகும் வரை பேக் செய்யவும். பின்னர் ஆற வைக்கவும்.
  4. ப்ராஸ்டிங் செய்ய: ஒரு பவுலில் பொடித்த சீனியையும், கோகோ பவுடரையும் சலித்து கொள்ளவும். அதனுடன் வெனிலா எஸ்ஸென்ஸ், உருக்கிய வெண்ணெய், மற்றும் சிறிது சிறிதாக பாலும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதை ஆறிய கேக் மேலே பூசவும். மேலே நட்ஸ், அல்லது ஸ்பிரிங்கில்ஸ்/சீரக மிட்டாய் தூவவும்.
  5. ருசியான, குழந்தைகள் விரும்பும் சாக்லேட் கேக் தயார். மைதா சேர்க்காமல் கோதுமை மாவில் செய்திருப்பதால், இது ஆரோக்கியமானதும் கூட.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்