வீடு / சமையல் குறிப்பு / Homemade Horlick /Multipurpose Mix for Icecream, Cookie, barfi, Milkshake, Poli and Energy Drink

Photo of Homemade Horlick /Multipurpose Mix for Icecream, Cookie, barfi, Milkshake, Poli and Energy Drink by Happy Home Maker-Tamil at BetterButter
816
5
0.0(2)
0

Homemade Horlick /Multipurpose Mix for Icecream, Cookie, barfi, Milkshake, Poli and Energy Drink

Nov-21-2017
Happy Home Maker-Tamil
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Homemade Horlick /Multipurpose Mix for Icecream, Cookie, barfi, Milkshake, Poli and Energy Drink செய்முறை பற்றி

வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய சுவையான ஆரோக்கிய பானம் குழந்தைகளுக்கு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ரோசஸ்டிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை - 200 கிராம்
  2. வனில்லா எஸ்சென்ஸ் - 1/4 தேக்கரண்டி
  3. நாட்டு சர்க்கரை - 50 கிராம்
  4. பால் பொடி- 4 மேசைக்கரண்டி
  5. பாதாம் - 10
  6. முந்திரி - 10
  7. குங்குமப்பூ- 5
  8. கோகோ பொடி - 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கோதுமையை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து பருத்தி துணியில் காய வைக்கவும்
  2. மின் விசிறியின் கீழ் 2 மணி நேரம் காய வைக்க வேண்டும்
  3. ஓரு மணி நேரம் ஆனதும் 1/4 தேக்கரண்டி வனில்லா எஸ்சென்ஸ் சேர்த்து கலந்து மீண்டும் ஒரு மணி நேரம் காய வைக்கவும்
  4. ஓரு வாணலியை காய வைத்து கோதுமை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டவும்.
  5. பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து சிறிது சூடாகும் வரை வறுத்து எடுக்கவும்.
  6. குளிர்ந்ததும் பால் பொடி, நாட்டு சர்க்க்ரை, குங்குமப்பூ சேர்த்து பொடியாக அரைக்கவும்
  7. காற்று புகாத பாட்டிலில் வைக்கவும்
  8. தேவைப்படும்போது ஒரு தம்ளர் தண்ணீர்/ பால் சுட வைத்து தேவயான அளவு பொடி சேர்த்து கலந்து பரிமாறவும்.
  9. சுவையான ஹார்லிக்ஸ் தயார்.
  10. கண்ட்டென்செட் மில்க், ப்ரெஷ் கிரீம் சேர்த்து அடித்து, இந்த பொடியை கலந்து பிரீசரில் வைத்தால் ஐஸ் கிரீம் தயார்
  11. குளிர்ந்த பால் சேர்த்து அடித்து மில்க் ஷேக் செய்யலாம்
  12. உருக்கிய நெய் சேர்த்து லட்டு செய்யலாம்.
  13. சப்பாத்தியின் உள்ளே இந்த பொடியை வைத்து இனிப்பு போளி செய்யலாம்.
  14. சிறிதளவு நெய், கண்ட்டென்செட் மில்க், தேங்காய் துறுவல், சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி பர்பி செய்யலாம்.
  15. கோகோ பொடி சேர்த்தால் சாக்லெட் ஹார்லிக்ஸ் தயார்
  16. சிறிது, கோகோ பொடியுடன் வெண்ணைய் அல்லது நெய், சிட்டிகை பேக்கிங் பொடி, ஹார்லிக்ஸ் பொடி கலந்து, குக்கி தயாரிக்கலாம்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
jeyaveni chinniah
May-11-2018
jeyaveni chinniah   May-11-2018

Semma

Saranya Manickam
Nov-25-2017
Saranya Manickam   Nov-25-2017

wonderful recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்