வீடு / சமையல் குறிப்பு / இறால் பிரியாணி

Photo of Prawn Biryani by Hameed Nooh at BetterButter
1173
4
0.0(0)
0

இறால் பிரியாணி

Nov-21-2017
Hameed Nooh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இறால் பிரியாணி செய்முறை பற்றி

சுவையான மற்றும் இலகுவான இந்த ப்ரான் பிரியாணி அதிக காரமில்லாமல் குழந்தைகள் சாப்பிட ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் - 2 கப் ( ஓடு நீக்கியது )
  2. பல்லாரி - 2
  3. தக்காளி - 2
  4. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  5. ஏலம் - 2
  6. பட்டை - சிறிய துண்டு
  7. கிராம்பு -2
  8. முந்திரி - 1/4 கப்
  9. தயிர் - 2 மேசைக்கரண்டி
  10. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  12. மல்லி இலை - 1/4 கப்
  13. புதினா - 1/4 கப்
  14. நெய் - 2 மேசைக்கரண்டி
  15. பாஸ்மதி அரிசி - 2 கப்
  16. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் 6 கப் தண்ணீரில் பட்டை உப்பு கிராம்பு மற்றும் ஏலம் போட்டு அரிசியை சேர்த்து வெந்ததும் எடுத்து வைக்கவும்
  2. நெய்யை சூடாக்கி நறுக்கி பல்லாரியை போட்டு பொறிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்
  3. மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
  4. இப்பொழுது புதினா மல்லி தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சுத்தப்படுத்திய இராலை சேர்த்து வேக விடவும்.
  5. மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி முந்திரியைப் போட்டு வறுத்தெடுக்கவும்.
  6. இரால் வெந்ததும் வேக வைத்த அரிசி யை ஒரு பாத்திரத்தில் ஒரு கப் போட்டு க்ரேவில் அதன் மேல் கொஞ்சம் பரப்பவும்
  7. இவ்வாறாக அனைத்தையும் போட்டு ஒரு கரண்டியை கொண்டு மெதுவாக கலந்து விட்டு மேலே முந்திரியை போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்