வீடு / சமையல் குறிப்பு / சன்னா பிரியாணி

Photo of Chickpea Briyani by Saivardhini Badrinarayanan at BetterButter
382
2
0.0(0)
0

சன்னா பிரியாணி

Nov-22-2017
Saivardhini Badrinarayanan
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சன்னா பிரியாணி செய்முறை பற்றி

அருமையான வெள்ளை கொண்டை கடலை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை கொண்டை கடலை 1/2 கப்
  2. பாசுமதி ரைஸ் 1 கப்
  3. பட்டை 1 இன்ச்
  4. சோம்பு 1 மேஜைக்கரண்டி
  5. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  6. கிராம்பு 2
  7. சின்ன வெங்காயம் 10
  8. பூண்டு 10
  9. தக்காளி 1
  10. பச்சை மிளகாய் 2
  11. தேங்காய் துருவல் 1/4 கப்
  12. உப்பு
  13. கொத்துமல்லி இலை 1/4 கப்
  14. நெய் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் கொண்டை கடலை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.பின் 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை ,சோம்பு, கிராம்பு , ஜீரகம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் பூண்டு பல் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன் நிறமாக வறுக்கவும்.
  4. அதில் தக்காளி , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின் கொத்துமல்லி இலை , தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.பின் ஆறியவுடன் ஒரு மிக்ஸில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  5. ஒரு குக்கரில் நெய் சேர்த்து வேக வைத்த கொண்டைக்கடலை, அரைத்த விழுது சேர்த்து கலந்து பாஸ்மதி அரிசி சேர்க்கவும். பின் உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்