வீடு / சமையல் குறிப்பு / மீன் பிரியாணி

Photo of FISH BIRYANI by Munsila Fathima at BetterButter
963
2
0.0(0)
0

மீன் பிரியாணி

Nov-22-2017
Munsila Fathima
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

மீன் பிரியாணி செய்முறை பற்றி

சுவையான மீன் பிரியாணி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பாசுமதி அரிசி - 1kg
  2. மீன் - 1kg ( முள் இல்லாதது)
  3. வெங்காயம் - 400 gm
  4. தக்காளி - 400 gm
  5. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  6. பச்சை மிளகாய் - 7
  7. மல்லி இலை, புதினா - 1 கட்டு
  8. லெமன் சாறு - 1 தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது - 100 gm
  10. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
  11. உப்பு, எண்ணெய் , புட் கலர் - தேவைக்கேற்ப
  12. பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி (பொடித்தது)

வழிமுறைகள்

  1. மீனுடன் மிளகாய் தூள், லெமன் சாறு, உப்பு, பின்ச் ரெட் கலர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
  2. வெங்காயத்தை நன்கு சிவக்க பொரித்து எடுங்கள்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் தக்காளி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மல்லி இலை, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். தயிர் சிறுது தண்ணீருடன் சேர்த்து நன்கு அடித்து சேர்க்கவும்.
  4. அதே சமயம் மீனை முக்கால் வேக்காடு பொரித்து எடுங்கள்.
  5. தக்காளி கலவை நன்கு வதங்கியதும் பொரித்த மீனை சேர்த்து 2 நிமிடம் வேக விடுங்கள்.
  6. பாசுமதி அரிசியை 90% வேக வைத்து வடித்து கொள்ளுங்கள்.
  7. மீன் வெந்ததும் மீனை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
  8. தக்காளி கலவையும் வேறு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
  9. அதே வாணலியில் தக்காளி கலவை, கொஞ்சம் வெந்த மீன் ,வேக வைத்த அரிசி ,கொஞ்சம் கலர் , பொரித்த வெங்காயம் தூவி கொள்ளுங்கள்.
  10. மேல கூறிய அதே ஸ்டெப்பை மறுபடியும் இரு முறை செய்யுங்கள். ஐந்தில் இருந்து ஏழு நிமிடம் தம்மில் வையுங்கள்.
  11. மல்லி இலை தூவி பரிமாறுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்