வீடு / சமையல் குறிப்பு / கூட்டாஞ்சோறு

Photo of Kootanchoru by Sowmya Sundar at BetterButter
687
5
0.0(0)
0

கூட்டாஞ்சோறு

Nov-22-2017
Sowmya Sundar
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கூட்டாஞ்சோறு செய்முறை பற்றி

தை பொங்கல் மறுநாள் இந்த கூட்டாஞ்சோறு செய்வார்கள்.திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான உணவு இது. காய்கறிகள், கீரை,பருப்பு,அரிசி எல்லாம் சேர்ந்த ஒரு ருசியான,ஆரோக்கியமான,மணம் மிகுந்த உணவு இது .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி- 1 கப்
  2. துவரம் பருப்பு- 1/2 கப்
  3. காய்கறிகள் -1 கப்(கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கு, அவரை,வாழைக்காய், கத்திரிக்காய் சேர்ந்து ஒரு கப்)
  4. ஏதேனும் ஒரு கீரை- ஒரு கைப்பிடி
  5. புளி - எலுமிச்சை அளவு
  6. தண்ணீர்- 5 கப்(அரிசி பருப்பு வேக வைக்க)
  7. மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
  8. மிளகாய் பொடி- 1/2 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. நல்லெண்ணெய் - 2குழிக்கரண்டி
  11. மசாலா அரைக்க:
  12. தேங்காய் துருவல்- 1/2 மூடி
  13. மிளகாய் வற்றல்- 8
  14. பச்சை மிளகாய்-2
  15. சீரகம்- 1 டீஸ்பூன்
  16. சின்ன வெங்காயம்- 12

வழிமுறைகள்

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். கீரையை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. குக்கரில் அரிசி, பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒன்றாக வேக வைத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து காய்கறிகள் மற்றும் கீரை,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  4. காய்கறிகள் வதங்கியதும் புளி கரைசல்,உப்பு, மிளகாய் பொடி சேர்த்து நன்கு வேக விடவும்
  5. காய்கறிகள் வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலா விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  6. பின்னர் இதனுடன் வெந்த அரிசி பருப்பு கலவை மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
  7. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  8. சுவை மிகுந்த கூட்டாஞ்சோறு தயார்
  9. அப்பளம் வடாம் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்